என் மலர்
பெண்கள் உலகம்

சிக்கன் சான்விச் செய்வது எப்படி
சிக்கனை வைத்து கிரேவி, குழம்பு, வறுவல், 65 என்று தான் செய்து சாப்பிட்டிருப்போம். சிக்கனை வைத்து சான்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பிரட் - 6 துண்டுகள்
எலும்பில்லாத சிக்கன் - 200 கிராம் (வேக வைத்து, கொத்தியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - தேவையான அளவு
வெங்காயம் - 1
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
வெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சிக்கனை வேகவைத்து மிக்சியில் போட்டு துருவியது போட்டு செய்து கொள்ளவும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது வெண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கி, கொத்திய சிக்கன், மிளகு தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்க வேண்டும்.
* பின்னர் பிரட் துண்டுகளை எடுத்து, அதில் ஒரு பக்கம் மட்டும் வெண்ணெய் தடவி, அதன்மேல் தக்காளி சாஸ் தடவி, பின் ஒரு பிரட்டின் நடுவில் சிக்கனை வைத்து, வெண்ணெய் தடவிய மற்றொரு பிரட்டை வைத்து மூடி பரிமாறவும்.
* இப்போது சுவையான சிக்கன் சான்விச் ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Next Story