என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    குழந்தைகளுக்கான ஆலு பிரெட் சீஸ் டிக்கிஸ்
    X

    குழந்தைகளுக்கான ஆலு பிரெட் சீஸ் டிக்கிஸ்

    குழந்தைகளுக்கு இந்த ஆலு பிரெட் டிக்கிஸ் மிகவும் பிடிக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு, பிரெட் ஸ்லைஸ் - தலா 4,
    மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சாட் மசாலா - தலா அரை டீஸ்பூன்,
    எலுமிச்சைச் சாறு -  ஒரு டீஸ்பூன்,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    * உருளைக்கிழங்கை வேக வைத்து, மசித்துக் கொள்ளவும்.

    * பிரட் துண்டுகளின் ஓரங்களை எடுத்து விட்டு நீரில் நனைத்து ஒட்டப் பிழிந்து வைக்கவும்.

    * ஒரு பாத்திரத்தில் பிழிந்த பிரெட் ஸ்லைஸ், மசித்த உருளைக்கிழங்கு, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து, விரும்பிய வடிவத்தில் தட்டவும்.

    * தவாவில் எண்ணெய் விட்டு, தட்டி வைத்த டிக்கிகளை போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு சிவந்ததும் எடுக்கவும்.

    * சுவையான ஆலு பிரெட் டிக்கிஸ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×