என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: ரவா லட்டு
    X

    கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: ரவா லட்டு

    இந்த கிருஷ்ண ஜெயந்திக்கு கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்யும் இனிப்பு, கார வகைகளை பற்றி பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ரவை - 1 கப்
    நெய் - 5 ஸ்பூன்
    சர்க்கரை - 1/2 கப்
    ஏலக்காய் பொடி- 1/4 ஸ்பூன்
    திராட்சை- 10
    முந்திரி - 10
    பால் - 1/4 கப்

    செய்முறை :

    * கடாயில் நெய்யை ஊற்றி சூடானதும் அதில் முந்திரி திராட்சையை போட்டு வறுத்து தனியே எடுத்துவைக்கவும்.

    * அதே நெய்யில் ரவையை போட்டு நன்றாக வறுத்துகொள்ளவும். ரவை பச்சை வாடை போகும் வரை வறுக்கவும்.

    * அடுத்து அதில் ரவையில் வறுத்த முந்திரி திராட்சை, ஏலக்காய் பொடி, பொடித்த சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

    * இந்த கலவையில் பாலை சிறிது சிறிதாக ஊற்றி கலக்கவும்.

    * அதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

    * சுவையான ரவா லட்டு ரெடி.

    குறிப்பு:

    * உருண்டை பிடிக்கும் அளவுக்கு பால் ஊற்றினால் போதும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×