என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    குழந்தைகளுக்கு விருப்பமான பொரி உருண்டை
    X

    குழந்தைகளுக்கு விருப்பமான பொரி உருண்டை

    குழந்தைகளுக்கு பொரி உருண்டை மிகவும் பிடிக்கும். இதை வீட்டில் செய்வது மிகவும் எளிமையானது.
    தேவையான பொருட்கள் :

    பொரி - 2 கப்,
    ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை,
    பொடித்த வெல்லம் - 1/2 கப்,
    தண்ணீர் - 1/4 கப்,
    நெய் - சிறிதளவு.

    செய்முறை :

    * வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி கொள்ளவும்.

    * கடாயில் வெல்லக்கரைசலை ஊற்றி மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.

    * பாகு நன்றாக கொதிக்கும் போது ஏலக்காய் தூள் சேர்க்கவும்.

    * வெல்ல பாகு உருட்டு பதம் வரும் வரை சூடாக்கவும்.

    * பின்னர், பொரியை பாகில் இட்டு, சிறிது சூடு ஆறிய பின், கையில் நெய் தடவிக் கொண்டு, சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.

    * சுவையான பொரி உருண்டை ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×