என் மலர்tooltip icon

    சமையல்

    இட்லிக்கு சூப்பரான எள்ளு தேங்காய் சட்னி
    X

    இட்லிக்கு சூப்பரான எள்ளு தேங்காய் சட்னி

    பெண்கள் தினமும் எள் சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    எள்ளு - 1/4 கப்

    துருவிய தேங்காய் - 1/2 கப்

    பூண்டு - 4 பற்கள்

    இஞ்சி - 1 துண்டு

    வரமிளகாய் - 7

    புளி - 1 எலுமிச்சை அளவு

    கடுகு-1 /2 ஸ்பூன்

    உளுந்தம் பருப்பு-1 ஸ்பூன்

    கறிவேப்பிலை-1 கொத்து

    பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை

    நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    இஞ்சி மற்றும் பூண்டு பற்களை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் எள்ளு விதைகளை சேர்த்து தீயினை சிம்மில் வைத்து வதக்கி விட வேண்டும்.

    எள் வதங்கி நன்றாக வாசனை வந்த பிறகு, அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள இஞ்சி மற்றும் பூண்டு பற்களை சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும். இஞ்சி பூண்டின் பச்சை வாசனை சென்ற பிறகு,புளி சேர்த்து வதக்கி விட வேண்டும்.

    இப்போது இதில் வரமிளகாய் மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து வதக்கவும். பின்னர் வதக்கிய பொருட்களை நன்றாக ஆறியதும் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து கொஞ்சம் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

    அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அடுப்பில் கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து பரிமாறினால் ருசியான எள்ளு தேங்காய் சட்னி ரெடி!

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    Next Story
    ×