search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    மதுரை ஸ்பெஷல் காரசாரமான கார தோசை
    X

    மதுரை ஸ்பெஷல் காரசாரமான கார தோசை

    • தோசையில் பல வகைகள் உள்ளன.
    • இன்று அதில் ஒரு வகையான கார தோசையை செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பழுத்த தக்காளி - மூன்று,

    பெரிய வெங்காயம் - ஒன்று,

    பூண்டு பல் - 5, வர

    மிளகாய் - 10,

    கொத்தமல்லி - சிறிதளவு,

    உப்பு - தேவையான அளவிற்கு,

    நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,

    தோசை மாவு - தேவையான அளவு.

    செய்முறை:

    தோசை சுட்டு அதன் மீது இந்த சட்னியை தடவி வேக வைத்து எடுத்தால் காரசாரமான கார தோசை ரெடி ஆகிவிடும்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லிவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிக்சியில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, பூண்டு, வர மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அடுப்பில் ஒரு வாணலியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் இந்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்க வேண்டும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசையாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வெந்ததும் அதன் மீது அரைத்த சட்னியை எல்லா இடங்களிலும் படும்படி தடவி 2 நிமிடம் மூடி வைத்தால் போதும்.

    மொறுமொறு காரசாரமான மதுரை ஸ்பெஷல் கார தோசை தயார் ஆகிவிடும்.

    இதற்கு சட்னி எதுவுமே தேவையில்லை, இருப்பினும் நீங்கள் விருப்பப்பட்டால் தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

    Next Story
    ×