என் மலர்
பெண்கள் உலகம்

சத்தான கீரை - பாசிப்பருப்பு பொரியல்
தினமும் உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது. இன்று கீரை, பாசிப்பருப்பை வைத்து பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கீரை - 1 கட்டு ( விருப்பமான கீரை)
பாசிப்பருப்பு - அரை கப்
தேங்காய் துருவல் - 1 தேக்கரண்டி
தாளிக்க :
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
செய்முறை :
* கீரையை மண் போக அலசி ஆய்ந்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பாசிப்பருப்பை உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.
* ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களைத் தாளித்த பின் கீரையைப் போட்டு வேக விடவும்.
* கீரை பாதி வெந்த பிறகு உப்பு போடவும்.
* அடுத்து அதில் வேக வைத்த பாசிப்பருப்பையும் சேர்த்து ஒன்றாக வதக்கவும்.
* கடைசியாக தேங்காய்த்துருவலைப் போட்டு ஒரு பிரட்டு பிரட்டி இறக்கவும்.
* சுவையான கீரை - பாசிப்பருப்பு பொரியல் தயார்.
* வெந்தயக்கீரை தவிர்த்து எல்லா விதக் கீரையிலும் செய்யலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Next Story