search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஜில்ஜில் மாம்பழ ஜுஸ் செய்வது எப்படி
    X

    ஜில்ஜில் மாம்பழ ஜுஸ் செய்வது எப்படி

    பழங்களை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு ஜூஸ் செய்து கொடுக்கலாம். குளுகுளு மாம்பழ ஜூஸ் செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பழுத்த மாம்பழம் - 2 (பெரியது)
    தேன் - 4 மேஜைக்கரண்டி
    ஐஸ் கியூப்ஸ் - தேவைப்பட்டால்

    செய்முறை :

    * மாம்பழத்தின் தோலை நீக்கி விட்டு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    * சில துண்டுகளை பொடியாக நறுக்கி தனியாக வைக்கவும்

    * மிக்சியில் மாம்பழ துண்டுகள், தேன், ஐஸ் கியூப்ஸ் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

    * அரைத்த விழுதை ஒரு கண்ணாடி கப்பில் ஊற்றி அதன் மேல் பொடியாக நறுக்கிய மாம்பழ துண்டுகள், ஐஸ் கியூப்ஸ் சேர்த்து பருகவும்..

    * சுவையான சத்தான மாம்பழ ஜுஸ் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×