என் மலர்
பொது மருத்துவம்

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்
- தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது.
- இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை:
கிராம்பு - 2,
ஏலம் - 2,
சுருள் இலவங்கப்பட்டை - 1,
அதிமதுரம் சிறுதுண்டு,
சுக்கு சிறுதுண்டு,
மிளகு - 10,
மஞ்சள் சிறிதளவு
இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.
இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது.
Next Story






