என் மலர்

  ஆரோக்கியம்

  உடலில் நச்சுத் தன்மையை நீக்குங்கள்
  X

  உடலில் நச்சுத் தன்மையை நீக்குங்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உடலில் நச்சுத் தன்மையை நீக்குங்கள் என்று அடிக்கடி சொல்வதுண்டு. இதன் பொருள் ரத்தத்தினை சுத்தம் செய்ய வேண்டும் என்பதுதான்.
  பொதுவில் மனித உடல் நச்சுப் பொருட்களையும் கழிவுப் பொருட்களையும் சிறுநீரகம், குடல், நுரையீரல் மற்றும் சருமம் மூலமாக வெளியேற்றி விடும். பல நச்சுப் பொருட்களை நாம் சுவாசத்தின் மூலம் உள்ளிழுத்து விடுகின்றோம். தூசு, தரை விரிப்பு, பெயிண்ட், சிகரெட் புகை மற்றும் வீட்டை சுத்தம் செய்யும் தூசு, பொது இடங்களில் பரவிக் கிடக்கும் தூசு இவற்றினை நாம் நம்மையறியாமல் சுவாசத்தின் மூலம் உள்ளிழுக்கின்றோம். நாம் உண்ணும் உணவு, தண்ணீர் இவற்றில் நாம் அறியாமலேயே நச்சுப் பொருட்கள் கலந்து விடுகின்றன.

  பூச்சி கொல்லி மருந்துகளும் அதனால் காய்கறிகளில் ஏற்படும் நச்சுத் தன்மை பற்றியும் விளக்கி பிரபல சினிமா கூட வெளிவந்து விட்டது. நம் சருமத்திலும் படுக்கை விரிப்பு, துண்டு இவற்றிலிருந்து நச்சுப் பொருட்கள் கலக்கின்றன. நாம் உண்ணும் உணவு செரிக்கப்படும் பொழுது மாவு சத்து, புரதம், கொழுப்பு இவற்றினை எரித்து சக்தியாக மாற்றப்படும் பொழுது ஏற்படும் கழிவுப் பொருட்களை உடல் உடனடியாக வெளியேற்ற வேண்டும். இல்லையெனில் இக்கழிவுப் பொருட்களும் நச்சுப் பொருட்களே.

  ஒரு உணவு எத்தனை சுத்தமானதாக இருந்தாலும் அதனை அளவுக்கு மீறி உண்டாலும் அல்லது முறையாக மென்று சாப்பிடாமல் அரைகுறையாய் விழுங்கினாலும் அஜீரணக் கோளாறு ஏற்படும். இதனை சரி செய்யா விடில் நச்சுத் தன்மை ஏற்படும். இதனால்தான் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்றார்கள். இத்தகு பாதிப்புகள் சில உணவு அலர்ஜி, க்ளூடென் அலர்ஜி ஆகியவற்றிலும் ஏற்படும்.

  ரத்தத்தினை சுத்தம் செய்ய ஜீரண உறுப்புகளுக்கு வேலையினை சற்று எளிதாக்க வேண்டும். அதிக எண்ணை, கொழுப்பு, காரம், மசாலா உணவுகளை அடியோடு தவிர்ப்பது நல்லது அல்லது அடிக்கடி தவிர்த்து விடுவது நல்லது. இது இயற்கையிலேயே உடலில் சுத்தம் ஏற்பட வழி வகுக்கும்.

  அன்றாடம் பல் தேய்ப்பதும், குளிப்பதும் உடலில் உள்ள நச்சுத் தன்மையை நீக்கும் ஒரு வழிதான். நம் உடலை முறையாய் பராமரிப்பதே நம் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் முறையாய் வாழ்ந்து முடிக்கத்தான் அவ்வகையில் நாம் என்னென்ன வழிகளை கடைபிடிக்கலாம் என்பதனைப் பார்ப்போம்.

  * அநேகரிடம் இருக்கும் ஒரு பழக்கம் நொறுக்குத்தீனி. இது வடை, பஜ்ஜி, போண்டா, முறுக்கு என இருக்கலாம். சோடா, குளிர்பானங்கள் என இருக்கலாம். அடிக்கடி டீ, காபி என இருக்கலாம். பாக்கு, புகையிலை போன்றவைகளும் இருக்கலாம். ஆக வாய் ஓயாது ஏதாவது மென்று கொண்டே இருக்கும் பழக்கம். இது ரத்தத்தில் பல நச்சுக்களை சேர்க்கும். இதனை தவிர்க்கும் விதத்தில்தான் நம் முன்னோர்கள் ‘உண்ணாவிரதம்’, ‘உபவாசம்’ என்ற முறைகளில் நம் ஆரோக்கியத்தினை காத்தனர்.

  இதனை நீங்கள் ஆன்மீக ரீதியாகச் செய்தாலும் சரி விஞ்ஞான ரீதியாக செய்தாலும் சரி உபவாசம் சிறந்த ஆரோக்கியத்தினைத் தரும். வெறும் நீர் மட்டும் குடித்து ஒரு நாள் உபவாசம் இருக்கலாம். பழ ஜூஸ், பழங்கள் மட்டும் உண்டு உபவாசம் இருக்கலாம். மாதம் ஒருமுறை உண்ணாது இருக்கலாம். இந்த உபவாசம் உடலுறுப்புகளுக்கு சற்று ஓய்வு தந்து ரத்தத்தில் நச்சுப் பொருட்களை நீக்கும்.

  * கெட்ட பழக்கங்கள் இருந்தால் புகை, மது போன்றவைகளை உடனடியாக நீக்குங்கள். இது உங்கள் ரத்தத்தை சுத்தமாய் வைக்கும் முக்கிய வழி முறை.

  * மோர், கொழுப்பில்லாத தயிர் அன்றாடம் உண்பதனை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

  * அடிக்கடி சிறிது நீர் குடியுங்கள். அதுவும் உபவாச காலத்தில் அவ்வப்போது சிறிது சிறிதாக நீர் குடிப்பது நன்மை பயக்கும்.

  * முறையான இடைவெளியில் மசாஜ் செய்து கொள்ளுங்கள். இது மனச் சோர்வினை நீக்கி ரத்த ஓட்டத்தினை சீர் செய்யும்.

  * காபியினை க்ரீன் டீயாக மாற்றுங்கள். இதன் பயனை நீங்களே உணருவீர்கள்.

  * துளசி, பூண்டு, இஞ்சி, தேன், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயம், மிளகு, சீரகம் போன்றவை அன்றாட உபயோகத்தில் இருக்கட்டும்.

  * இட்லி, தோசை, சாப்பாடு என்றுதான் சாப்பிட வேண்டும் என்று பழக்கப்படுத்திக் கொள்ளாதீர்கள். காய்கறி ஸ்மூதி எனப்படும் வடிகட்டாத ஜூஸ், பழ+காய் ஜூஸ் என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

  * ஆணோ, பெண்ணோ உடற்பயிற்சி என்பது மிக அவசியம். உடற்பயிற்சியின் பொழுது வியர்வையில் நச்சுப் பொருட்கள் எளிதாய் வெளியேறும்.

  * தியானம் செய்யுங்கள். இதன் பொருள் எதனையும் நினையாது அமைதியாய் ஓர் இடத்தில் அசையாது 2-0 நிமிடம் இருக்கப் பழகுங்கள். ஆன்மீக ரீதியாக தியானப் பயிற்சி மேற்கொண்டால் நன்மையே.

  * தூக்கம் தேவையான அளவு இருக்க வேண்டும். குறைவான தூக்கம் வாழ்க்கையின் தரத்தினையே பாதித்து விடும்.

  * நார்சத்து உணவினை கட்டாய பழக்கமாக்கி விடுங்கள்.

  * காலையில் எலுமிச்சை சாறு கலந்த நீரினை முதலில் குடியுங்கள்.

  * சுத்தமான தேங்காய் எண்ணெயினை முடி, சருமம் இவற்றிற்கு பயன்படுத்துங்கள்.

  * அக்கு ப்ரஷர் முறையில் பாதம், உள்ளங்கைகளை மசாஜ் செய்யுங்கள்.

  * மருந்தே நிவாரணம் என்று நினைக்காதீர்கள்.

  * கண்டிப்பாய் யோகா பழகுங்கள்.

  * முடிந்தவரை வெள்ளை சர்க்கரையினை தவிர்த்து விடுங்கள்.

  * முடிந்த வரை சைவ உணவினை எடுத்துக் கொள்ளுங்கள்.

  * ரசாயன தெளிப்பு இல்லாத இயற்கை உரம் கொண்ட உணவுப் பொருட்களை உட்கொள்ள பழகுங்கள்.

  * வீட்டில் சமைத்த உணவினை மட்டுமே உட்கொள்ள பழகுங்கள்.

  * எப்ஸம் உப்பு கலந்து நீரில் குளியுங்கள்.

  * எளிதாக செரிமானம் ஆகக் கூடிய உணவுகளை அளவாக சாப்பிடுங்கள்.

  * மஞ்சளை உணவிலும், சரும பராமரிப்பிற்கும் பயன்படுத்துங்கள். உண்ணும் உணவிலும் அடிக்கடி சிலவற்றினை சேர்க்கும் பொழுது நச்சுப் பொருட்கள் உடலிலிருந்து அவ்வப் பொழுது நீங்கி விடும்.

  * அவ்வகையில் ஆப்பிள் மிகச் சிறந்த பழமே. தினம் ஒரு ஆப்பிள் உண்ண மருத்துவரிடம் நீங்கள் செல்ல வேண்டியிராது என்பதும் உண்மையான வாக்கியமே, நார்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள், ப்ளேவனாய்ட்ஸ் நிரம்பியது. ரத்தத்தினை சுத்தம் செய்வது. கல்லீரலில் இருக்கும் நச்சினையும் நீக்க வல்லது. சிறந்த உணவுகளின் வரிசையில் இருப்பது.

  * பாதாம் வைட்டமின் ஈ சத்து நிரம்பியது. நார்சத்து, கால்ஷியம், மக்னீசியம், புரதம் நிரம்பியது. சர்க்கரை அளவினை கட்டுப்படுத்த உதவும். குடலில் சேரும் நச்சுப் பொருட்களை நீக்குவது. வயதிற்கேற்ப அளவாக உண்ணலாம்.

  * துளசி கிருமிகளை நீக்குவது. கல்லீரலை வெகுவாய் பாதுகாப்பது. ஜீரண சக்தி அளிப்பது. சிறுநீரக நச்சுக்களை நீக்குவது. வயிற்றில் புண் ஏற்படாமல் தவிர்ப்பது. புற்று நோய் தவிர்ப்பு, வைரஸ் பாதிப்புகளுக்காக கூட பரிந்துரைக்கப்படுகின்றது.

  * பீட்ரூட் காய்கறிக்கு உங்களுக்கு சக்தி அளித்து உயர் ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்தும் குணம் உண்டு. மூட்டு வலி குறைய, புற்று நோய் எதிர்ப்பு, மூளை சக்தி கூட, கிருமி எதிர்ப்பு, ரத்த சுத்திகரிப்பு, கல்லீரல் சுத்திகரிப்பு என பீட்ரூட்டினால் அநேக நன்மைகள் உண்டு.

  * ப்ரோகலி எனும் பச்சை நிற காலிப்ளவர் கல்லீரல் என்ஸைம் உடன் இணைந்து வேலை செய்து நச்சுப் பொருட்களை வெளியே அகற்றுகின்றது. இதனை பச்சையாக சாலட் முறையில் உண்பதே நல்லது. நீரிழிவு நோய் கட்டுப்பட, எலும்பு தேய்மானம் இன்றி இருக்க ப்ரோகலியினை அடிக்கடி உணவில் பயன்படுத்துவது நல்லது.

  * காபேஜ் எனும் முட்டைகோஸ் கல்லீரலை சுத்தப்படுத்துவதிற்கு மிகவும் நல்லது. உடலை புத்துணர்ச்சி பெறச் செய்யும்.
  ஆண்கள் அதிகமான ப்ளாக்ஸ் சீட்ஸ் உண்பதனை தவிர்க்கவும்.

  * நோய் எதிர்ப்பு சக்தி வழங்குவதில் பூண்டு மிக உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. பல கிருமி நாசினி மருந்துகளை விட இது உயர்வாக கூறப்படுகின்றது. அன்றாட உணவில் பூண்டு மிக அவசியம்.

  * இஞ்சி சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. பருத்த கல்லீரலுக்கு அன்றாடம் இஞ்சி உட்கொள்வது மிக நல்லது மது பழக்கமுடையோருக்கு மிக அவசியமானது.

  * கிரீன் டீ உடலுக்கு நன்மை பயக்கும். நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது என்று படித்துள்ளோம். ஆனால் இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவினை குறைக்க வல்லது. மறதி நோய் தவிர்ப்பிற்கு உதவுகின்றது. புற்றுநோய் எதிர்ப்பு சக்தி தருகின்றது. இருதய நோயிலிருந்து காக்கின்றது.

  * எலுமிச்சை சாறு உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்கும்.
  வாந்தி, மயக்கத்தினை நிறுத்தும்.
  மனச் சோர்வை நீக்கும்.
  சிறுநீரக கல் வராது தவிர்க்கும்.
  சருமத்தினை பராமரிக்கும்.
  கிருமி நாசினி
  ஜீரணத்திற்கு உதவும்.
  என பல நன்மைகளை கூறலாம். தினமும் எலுமிச்சை சாறு கலந்த நீர் பருகுவது எளிதான ஒன்றே.

  * வெங்காயம் - இது ஒன்றுதான் அனைவரது வீட்டிலும் எளிதாய் பயன்படுத்தப்படும் பொருளாக உள்ளது. சுவைக்காக இதனை மக்கள் பயன்படுத்துகின்றனர். அதிக சத்து கொண்டது. பல வித நோய்களில் இருந்து காக்கின்றது. சிறிதளவாவது சமைக்காது பச்சையாக உண்பது நல்லது.

  * அன்னாசி பழம் குடல் சுத்தம் செய்கின்றது. புற்று நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகம் கொண்டது. ரத்தம் கெட்டிப்படுவதினை அதன் நச்சுப் பொருட்களை நீக்குவதன் மூலம் சுத்தம் செய்கின்றது.

  * மஞ்சளைப் பற்றி கூற வேண்டும் எனில் சில பக்கங்கள் தேவைப்படும். மஞ்சள் சேர்த்த பால் அருந்துவதும் சமையலில் சேர்ப்பதும் பெருத்த நன்மை பயக்கும்.

  இத்தனை நன்மைகள் தெரிந்த பின், இனியும் நோயாளியாக இருக்கலாமா? இன்றே ஆரோக்கியமான மனிதனாக மாறி விடுங்கள்.
  Next Story
  ×