என் மலர்

  ஆரோக்கியம்

  சிறுநீரகக் கற்களை கரைக்கும் தேங்காய்த்தண்ணீர்
  X

  சிறுநீரகக் கற்களை கரைக்கும் தேங்காய்த்தண்ணீர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேங்காய்த் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அதை தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் நல்ல மாற்றங்களைக் காணலாம்.
  இளநீர் அருந்துவதன் நன்மைகள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதேபோன்று தேங்காய்த் தண்ணீரும் பல நன்மைகளைத்தருவதை பலரும் அறிந்திருக்கமாட்டார்கள். தேங்காய்த் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அதை தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் நல்ல மாற்றங்களைக் காணலாம்.

  தேங்காய் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் நோய் எதிர்பபு மண்டலம் வலிமை பெறுகிறது. சிறுநீர் பாதை தொற்றுகள், ஈறு நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள், காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ்களை தேங்காய்த் தண்ணீர் அழித்து வெளியேற்றிவிடும்.

  தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய்த் தண்ணீர் குடித்து வந்தால், உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, தைராய்டு சுரப்பி சீராக செயல் பட வழி வகுக்கும்

  சிறுநீரக பிரச்சனைகள் இருந்தால், தேங்காய்த் தண்ணீரைக் குடித்து வருவதன் மூலம், சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்தலாம். அது நச்சுகளை (டாக்சின்களை) வெளியேற்றுவதோடு, சிறுநீரகக் கற்களையும் கொஞ்சம் கொஞ்சமாக கரைக்கிறது.

  செரிமான பிரச்சினை உள்ளவர்கள், தேங்காய்த் தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால், செரிமான பிரச்சனை நீங்குவதை நன்கு உணரலாம். காரணம், தேங்காய்த் தண்ணீரில் நார்ச் சத்து வளமாக நிறைந்துள்ளது. தொடர்ந்து இதை குடித்து வந்தால், வாயுத்தொல்லையில் இருந்தும் விடுபடலாம். தேங்காய்த் தண்ணீரை எவ்வளவு குடித்தாலும், உடலில் கொழுப்பு சேராது. மேலும் இது பசியை கட்டுப்படும். இதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.

  உயர் ரத்த அழுத்தம் இருந்தால், தினமும் காலையில் தேங்காய்த் தண்ணீர் குடித்தால், அது உடலின் எலெக்ரோ லைட்டுக்களை சீராக்கி, உயர் ரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.

  தினமும் ஒரு தம்ளர் தேங்காய்த் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, நாள் முழுவதும் பொலிவான தோற்றத்துடனும், போதிய ஆற்றலுடனும் செயல்பட முடியும்.

  இனியாவது சமையலுக்கு தேங்காய் உடைக்கும்போது அதன் தண்ணீரை வீணே கொட்டி விடாமல் தண்ணீர் அருந்துவது போல் அருந்தி விடுங்கள்.
  Next Story
  ×