என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    முத்திரை
    X
    முத்திரை

    சர்க்கரை நோயாளிகளுக்கு பலன் அளிக்கும் முத்திரை

    இந்த முத்திரை இன்சுலின் சுரக்கும் குறைபாட்டை நீக்க வல்லது. சுகர் உள்ளவர்கள் இந்த முத்திரை செய்தால் மிக விரைவிலேயே நல்ல பலன் நிச்சயம் கிடைக்கும்.
    செய்முறை

    நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை இருபது விநாடிகள் கூர்ந்து தியானிக்கவும். பின் கைகளை கும்பிடுவதை அப்படியே மாற்றி கும்பிடவும். படத்தில் உள்ளது போல் செய்யவும். இரண்டு நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும். காலை, மதியம், மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும்.

    பலன்கள்

    இந்த முத்திரை கணையத்தை மிகச் சிறப்பாக இயங்கச் செய்யும். இன்சுலின் சுரக்கும் குறைபாட்டை நீக்க வல்லது. நரம்புத் தளர்ச்சியை நீக்கும். சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் வாழ வழி வகை செய்கின்றது. செரிமானம் நன்றாக இயங்கும். தோள்பட்டை வலி, கால் பாத வலி, வீக்கம் வராமல் தடுக்கின்றது. உடலில் நீரின் தன்மை சரியாக இருக்க செய்கின்றது. சுகர் உள்ளவர்கள் இந்த முத்திரை செய்தால் மிக விரைவிலேயே நல்ல பலன் நிச்சயம் கிடைக்கும்.

    பி.கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)
    6369940440
    Next Story
    ×