search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இடுப்பு வலியை குணமாக்கும் திரிகோணாசனா
    X

    இடுப்பு வலியை குணமாக்கும் திரிகோணாசனா

    திரிகோசணா முக்கோண நிலையில் நின்று செய்வதால் இந்த பெயர் பெற்றுள்ளது. இதனை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    செய்முறை :

    முதலில் கால்களை விரித்து நில்லுங்கள். ஆழ்ந்து மூச்சை விட வேண்டும். கைகளையும் மெல்ல விரித்து நில்லுங்கள். நன்றாக சம நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். இப்போது வலது பாதத்தை வெளி நோக்கி திருப்புங்கள். இடது பாதம் உள் நோக்கி, வலது காலை பார்த்தவாறு திருப்ப வேண்டும்.

    ஸ்டெடியான நில்லுங்கள் மூச்சை ஆழ்ந்து இழுங்கள். மெதுவாய் மூச்சை விட்டவாறு உடலை வலது பக்கம் குனிந்து வலது கையால் பாதத்தை தொட முயற்சிக்கவும். பாதத்தை தொட முடியவில்லையென்றால் கணுக்காலையாவது தொட முயற்சியுங்கள்.

    இப்போது, இடது கையை மேலே தூக்குங்கள். முகம் இடது கையை பார்க்குமாறு திருப்புங்கள். இந்த நிலையில் 1 நிமிடம் நிற்க வேண்டும். பிறகு காலை மாற்றி இப்போது இடது பக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு 5 முதல் 7 முறை செய்ய வேண்டும்.

    கழுத்து மற்றும் முதுகில் அடிபட்டிருந்தால், ஒற்றை தலைவலி, வயிற்றுப் போக்கு ஆகியவற்றில் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.

    பலன்கள் :

    இடுப்பு வலி, முதுகு வலி நீங்கும். மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கும். உடலின் வளர்சிதை மாற்றம் நன்றாக நடக்கும். பதட்டம், நரம்புத் தளர்ச்சி ஆகியவை குணமாகும். புகைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்காது.

    Next Story
    ×