search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளின் வீடியோ கேம் பழக்கம்
    X
    குழந்தைகளின் வீடியோ கேம் பழக்கம்

    குழந்தைகளின் வீடியோ கேம் பழக்கம் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது?

    இந்த வீடியோ கேம் விளையாட்டுக்கள் ஒருவருடைய தன்னம்பிக்கையை வளர்க்க உதவுகிறது. எனினும், இந்த வீடியோ கேம் விளையாட்டின் உச்சக்கட்ட விளைவு மன நலம் பாதிக்கப்படுவது தான்.
    இந்த வீடியோ கேம் விளையாட்டுக்கள் ஒருவருடைய தன்னம்பிக்கையை வளர்க்க உதவுகிறது. எனினும், இந்த வீடியோ கேம் விளையாட்டின் உச்சக்கட்ட விளைவு மன நலம் பாதிக்கப்படுவது தான். ஓர் உதாரணத்திற்கு... இந்த வீடியோ கேம் விளையாட்டுக்களில் பல நிலைகள் இருக்கும். இந்த நிலைகளை பல தடைகளை தாண்டியும் நாம் கடக்க வேண்டியது அவசியம். ஒருவேளை இந்த நிலைகளை கடந்து இறுதி நிலையை ஒருவர் எட்ட, இதனால் ஒரு தன்னம்பிக்கை பிறக்கும். அதுவே, தொடர் தோல்வியை சந்தித்தால் அவர்கள் தன் மனதை ரிமோட்டின் கட்டுப்பாட்டில் இயங்கவிட என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். சமீபத்தில் உலகத்தையே அச்சுறுத்திய ப்ளூ வேல் இதற்கு ஆக சிறந்த எடுத்துக்காட்டு.

    வீடியோ கேம் எதை கற்பிக்கிறது?


    1. பெரும்பாலான வீடியோ கேம்கள் மனிதனையும், விலங்கையும் கொல்வது போல் வடிவமைக்கப்படுகிறது. இதனால் தற்கொலை முதல் கொலை வரை சாத்தியம் என்கிறது அறிவியல்.

    2. சில வீடியோ கேம்களில் மது மற்றும் புகை பழக்கம் வடிவமைக்கப்பட்டிருக்க, இதனால் 'நாம் ஏன் முயன்று பார்க்கக்கூடாது?' என்ற எண்ணம் உங்கள் குழந்தையிடம் வளரலாம்.

    3. குற்ற செயல்கள் வீடியோ கேமில் வடிவமைக்கப்பட எப்படி நாயகன் தப்பிக்கிறான் என நம்மை விளையாடவும் வைத்துவிடுகிறார்கள். இதன் விளைவு, உங்கள் குழந்தையின் மூளையில் பெரிய மாறுதலை ஏற்படுத்துகிறது.

    4. வீடியோ கேமில் காணப்படும் இன்னொரு முக்கியமான விஷயம் செக்ஸ் பற்றியதை கிராஃபிக்சில் வடிவமைப்பதே. இதனால் சிறுவர்களின் மனம் சலனத்துடன் இருக்க சிலசமயத்தில் சங்கடத்தையும் சேர்த்து தந்துவிடுகிறது.

    5. வீடியோ கேம் விளையாடும் குழந்தைகளுக்கு ஒருவரை தள்ளிவிட்டு மேலே வர வேண்டிய ஆர்வம் ஏற்படும். இது அவர்கள் வாழ்க்கையில் தீயதை போதிக்கும் ஒரு பழக்கமாகும்.

    எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது?

    1. வீடியோ கேம்மை வீட்டின் மூலையில் அமர்ந்து விளையாடும் உங்கள் குழந்தைக்கு வெளி உலகம் என்பது தெரியாமல் வளர வாய்ப்பிருக்கிறது.

    2. உங்கள் குழந்தை உங்களுடன் செலவிடும் நேரம் என்பது குறைய படிப்பில் இருக்கும் கவனமும் குறையக்கூடும்.

    3. உங்கள் குழந்தையின் உடல் தேவையான சத்துக்களை இழந்து எதிர்ப்பு சக்தியற்று வளரக்கூடும்.

    என்ன செய்ய வேண்டும்?

    1. நீங்களே கேமை தேர்வு செய்து கொடுங்கள். அந்த கேம்மில் இறுதி வரை தவறான எதுவும் இல்லை என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.

    2. அவர்களுடன் நீங்களும் விளையாடுங்கள். இதனால் அந்த கேம்மில் என்ன இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துக்கொள்ளக்கூடும்.

    3. உங்கள் குழந்தைக்கு வீடியோ கேம் விளையாட பழக்கப்படுத்தாதீர்கள். அதற்கு பதிலாக பாடுவது, ஆடுவது, வெளியில் விளையாடுவது போன்றவற்றை பழக்கப்படுத்தலாம்.

    4. உங்கள் குழந்தைகள் விளையாட ஆசைப்பட்டால்... அவர்களுக்கு ஒரு சில விதியை நீங்களே விதித்து அவர்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முயலுங்கள்.
    Next Story
    ×