என் மலர்

  ஆரோக்கியம்

  பிறந்த குழந்தைக்கு ஏற்படும் வயிற்று வலியை குணப்படுத்த இயற்கை மருத்துவம்
  X

  பிறந்த குழந்தைக்கு ஏற்படும் வயிற்று வலியை குணப்படுத்த இயற்கை மருத்துவம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிறந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகும் போது, குடலானது சரியான வடிவத்திற்கு வர ஆரம்பிப்பதால், அப்போது குழந்தைகளுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்படுகிறது.
  பெரும்பாலான பிறந்த குழந்தைகளுக்கு 3-6 மாத கால இடைவெளியில் வயிற்று வலியானது ஏற்படும். இவ்வாறு குழந்தைகளுக்கு வயிற்று வலி ஏற்படும் போது, அவர்கள் தொடர்ந்து அழுது கொண்டே இருப்பார்கள். இதற்கு பெரும் காரணம் குழந்தைகளுக்கு பொதுவாக குடலானது சிறிதாக இருக்கும்.

  ஆகவே அவர்கள் பிறந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகும் போது, குடலானது சரியான வடிவத்திற்கு வர ஆரம்பிப்பதால், அப்போது குழந்தைகளுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்படுகிறது. ஆகவே தான் மருத்துவர்கள் குழந்தைகளுக்கு கிரேப் வாட்டரை கொடுக்கச் சொல்கிறார்கள். ஆனால் கிரேப் வாட்டர் இல்லாத காலத்தில், ஒரு சில இயற்கை வைத்தியங்கள் மூலமே, குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலியானது குணமாக்கப்பட்டது.

  எனவே குழந்தைகளின் குடல் வளர்ச்சிக்காக ஏற்படும் வயிற்று வலியைப் போக்குவதற்கு எந்த மாதிரியான இயற்கை வைத்தியத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.

  பட்டை செரிமானமின்மை மற்றும் வாயுத் தொல்லையை குணப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும். அதுமட்டுமின்றி குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலியையும் சரிசெய்ய, பட்டையை டீ போட்டு கொடுக்கலாம்.

  சீரகம் குழந்தைகளது குடலுக்கு ஏற்படும் எந்த ஒரு பிரச்சனையையும் சரிசெய்யும் தன்மையுடையது. குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலிக்கு மிகவும் சிறந்தது.

  மருத்துவ குணம் அதிகம் நிறைந்த துளசி குழந்தைகள் வயிற்று வலியால் ஏற்படும் அவஸ்தையைப் போக்கி, அவர்களுக்கு நிம்மதியான தூக்கத்தைக் கொடுக்கும். எனவே குழந்தைகளுக்கு துளசியின் சாற்றை வயிற்று வலியின் போது கொடுக்க வேண்டும்.

  பிறந்த குழந்தையின் குடலில் கடுமையான பிடிப்பு இருப்பதால், அது வயிற்று வலியை ஏற்படுத்தும். எனவே இத்தகைய பிடிப்புக்களை போக்குவதற்கு புதினாவின் சாற்றினை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

  குழந்தைகளது உடலில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்குவதற்கு சிறந்த மருந்து என்றால் அது தாய்ப்பால் தான். எனவே குழந்தைகள் தொடர்ச்சியாக வயிற்று வலியினால் அழும் போது, அவர்களுக்கு அவ்வப்போது தாய்ப்பால் கொடுத்தால், அவர்களுக்கு வலி குறைவதோடு, நல்ல தூக்கமும் வரும்.

  தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றி, சோம்பை ஒரு துணியில் போட்டு இறுக்கமாக கட்டி, அதனை தோசைக்கல்லில் தொட்டு, குழந்தையின் வயிற்றில் மிதமான சூட்டில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

  குழாயிலிருந்து ஓடும் தண்ணீரிலோ அல்லது வாளியில் உள்ள நீரிலோ குழந்தையை உட்கார வைத்தால், வயிற்று வலி குணமாகும். குறிப்பாக அவ்வாறு உட்கார வைக்கும் போது, தண்ணீர் குழந்தையின் மூக்கு, கண் அல்லது காதுகளுக்குள் செல்லாதவாறு கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
  Next Story
  ×