என் மலர்

  ஆரோக்கியம்

  ஒரு வயது குழந்தைக்கு மலச்சிக்கல் பிரச்சினையா?
  X

  ஒரு வயது குழந்தைக்கு மலச்சிக்கல் பிரச்சினையா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒரு வயது குழந்தைக்கு மோஷன் போவது ரொம்ப சிரமமாக இருக்கிறதா.... இதற்கு முக்கிய காரணம் நீங்கள் கொடுக்கும் உணவு முறைதான்.
  ஒரு வயது குழந்தைக்கு மோஷன் போவது ரொம்ப சிரமமாக இருக்கிறதா.... இதற்கு முக்கிய காரணம் நீங்கள் கொடுக்கும் உணவு முறைதான். எடுத்ததும் ஆப்பிலும் கேரட்டும்தான் வேக வைத்து கொடுப்போம். ஆப்பிலும் கேரட்டும் மோஷன் அதிகமாக போவதை கட்டுப்படுத்தும்.

  குழந்தைகளுக்கு திட உணவு ஆரம்பித்ததும். அடிக்கடி தண்ணீர் அதிகமாக குடிக்க கொடுக்க வேண்டும். ரொம்ப கஷ்டப்படும் குழந்தைகளுக்கு ஹார்டாக கடித்து முழுங்கும் உணவுகளை தவிர்க்கவும். முதலில் வாழைப்பழம் சாப்பிட பழக்குங்கள். இல்லை வாழைப்பழத்தை ஹல்வா போல் (அ) மில்க் ஷேக் போன்று தேங்காய் பால் சேர்த்து மிக்சியில் அடித்து கொடுக்கவும். இதை தேங்காய் பாலில்தான் தயாரிக்கணும் என்றில்லை காய்ச்சி ஆறிய பாலில் செய்தாலும் நல்ல இருக்கும். பால், பழம், வாழை சேர்த்த மில்க் ஷேக்குகள் செய்த்தும் உடனே குடிக்கணும் இல்லை என்றால் கறுத்து போய்விடும். வெயில் காலஙகளில் ஐஸ் க்யூப்ஸ் சேர்த்தும் தயாரிக்கலாம்

  பால் சாப்பாடு சாப்பிடும் குழந்தையாய் இருந்தால் பால் வாழைப்பழம் சிறிது சர்க்கரை சேர்ர்த்து பிசைந்து ஊட்டி விடவும். ராகி (கேழ்வரகு) கூழாகவோ (அ) பானமாகவோ தயாரித்து கொடுக்கவும். இந்த உணவும் குழந்தைகள் மோஷன் பிரியாக போக உதவும்.

  ஆரஞ்சும், பாலும் சேர்த்து ஜூஸாக அல்லது சுளைகளாக பிரித்து அதில் லேசாக சர்க்கரை தூவி கொடுக்கலாம். இப்படி கஷ்டப்படும் குழந்தைகளுக்கு உணவு சாப்பிட முடியாமல், குமட்டி கொண்டு வரும்.

  எப்போதும் காய்ச்சி ஆறிய வெந்நீரை அடிக்கடி கொடுத்து கொண்டே இருக்கவும்.

  விளக்கெண்ணையை வயிற்றில் வட்ட வடிவத்தில் நன்கு தேய்த்து விட்டு வெந்நீர் அருந்த கொடுக்கவும். குழந்தைகளுக்கு மோஷன் போகும் இடத்திலும் கொஞ்சம் தடவி விடணும். ரெயிஸின்ஸ் (கிஸ்மிஸ் பழம்) பழத்தை நன்கு தண்ணீரில் ஊறவைத்து ஜூஸாக அடித்து கொடுத்தால் உடனே மோஷன் ஆகும். இதை தினமும் இரவில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை பிழிந்து குடித்தால் அடிக்கடி ஏற்படும் சளித்தொல்லையும் கட்டுப்படும்.

  ரசம் சாதம் குழைவாக, பருப்பு கீரை கடைசல், வெள்ளை வாயு கஞ்சி போன்றவை கொடுக்கவும். ரசத்தில் இஞ்சி ரசம் செய்து குழைவாக சாதத்தில் போட்டு பிசைந்து ஊட்டி விடவும்.

  சோம்பை கருகாமல் வருத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட்டு கால் டம்ளராக்கி குடிக்க கொடுக்கவும்.

  மெயினாக நிறைய பழம் காக்டெயில் ஜூஸ் வகைகள் அதிகமாக கொடுக்கவும், மாம்பழ சீசனில் தேங்காய் பாலுடன் மாம்பழ மில்க் ஷேக்கும் கொடுக்கலாம்.
  Next Story
  ×