search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    டேஸ்டியான மட்டன் கீமா புலாவ்
    X

    டேஸ்டியான மட்டன் கீமா புலாவ்

    அனைவருக்கும் பிடித்தமான டேஸ்டியான மட்டன் கீமா புலாவ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - 2 கப்
    கொத்துக்கறி - 400 கிராம்
    தயிர் - 1 கப்
    ப.மிளகாய் - 5 (காரத்திற்கு ஏற்றபடி)
    வெங்காயம் - 100 கிராம்
    இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்
    இலவங்கம் - ஐந்து
    ஏலக்காய் - ஐந்து
    மிளகு - அரை டீஸ்பூன்
    பாதாம், பிஸ்தா, காய்ந்த திராட்சை - தேவைக்கு
    குங்குமப்பூ - அரை டீஸ்பூன்
    நெய் - 50 கிராம்
    உப்பு - தேவைகேற்ப

    செய்முறை :

    * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

    * கொத்துக்கறியை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும்.

    * குக்கரை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் மிளகு, ஏலக்காய், லவங்கம் போட்டு தாளித்த பின் நறுக்கிய ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    * வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போன வதக்கியவுடன் தயிர், பாதாம், பிஸ்தா, கிஸ்மிஸ், குங்குமப்பூ சேர்த்து, 5 நிமிடம் வதக்கி பின்னர் சுத்தம் செய்த கீமாவை சேர்த்து வதக்கவும்.

    * போதுமான உப்பு சேர்க்கவும். தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் கொத்துக்கறி சேர்த்து 5 விசில் வந்ததும் இறக்கி வைக்கவும்.

    * ப்ரஷர் போனதும் திறந்து, பாசுமதி அரிசியை சேர்த்து நான்கு கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 3 விசில், 10  நிமிடம் மிதமான தீயில் வைத்து அடுப்பை அனைக்கவும்.

    * ப்ரஷர் போனதும் மூடியை திறந்து, ஒரு கிளறு கிளறி மட்டன் கீமா புலாவை பரிமாறவும்.

    * இதற்கு வெங்காய பச்சடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×