என் மலர்
உலக கோப்பை கால்பந்து-2022

சிக்கன்னா கல்லூரி.
திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் 22-ந்தேதி வகுப்புகள் தொடக்கம்
- இதுவரை நடைபெற்ற கலந்தாய்வில் 87 சதவீதம் மாணவர் சேர்க்கை முடிந்துள்ளது.
- மூன்றாம் கட்ட கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
திருப்பூர்:
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 2-ம் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்தது. இதுவரை நடைபெற்ற கலந்தாய்வில் 87 சதவீதம் மாணவர் சேர்க்கை முடிந்துள்ளது. இதில் பி.காம்.சர்வதேச வணிகம், பி.ஏ.தமிழ் இலக்கியம், பொருளியல், வரலாறு, பி.எஸ்சி.ஆடை வடிவமைப்பு நாகரி–கம் ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவர் சோ்க்கை முழுமை அடைந்துள்ளது.
மற்ற பாடப்பிரிவுகளில் ஒரு சில இடங்கள் மட்டுமே மீதம் உள்ளன. அடுத்தக்கட்ட கலந்தாய்வில் மீதமுள்ள இடங்கள் நிரப்பப்படும். கல்லூரியில் வருகிற 22-ந் தேதி பாட வகுப்புகள் தொடங்குகிறது. மூன்றாம் கட்ட கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.இத்தகவலை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Next Story






