என் மலர்
வழிபாடு

நான்கு வகை திருநீறு
- திருநீற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர்.
- கல்பம், அணுகல்பம், உபகல்பம், அகல்பம் என்பவைகளாகும்.
தற்போதுள்ள திருநீற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர். அவை, கல்பம், அணுகல்பம், உபகல்பம், அகல்பம் என்பவைகளாகும்.
கல்பம்:- கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தை, பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி, பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பது 'கல்ப'த் திருநீறு எனப்படும்.
அணுகல்பம்:- ஆரண்யங்களில் (காடுகளில்) கிடைக்கும் பசுஞ் சாணங்களைக் கொண்டு, முறைப்படி தயாரிக்கப்படுவது 'அணுகல்ப'த் திருநீறு எனப்படும்.
உபகல்பம்:- மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது 'உபகல்ப'த் திருநீறு எனப்படும்.
அகல்பம்:- அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தை, சுள்ளிகளால் எரித்து எடுப்பது 'அகல்ப'த் திருநீறு எனப்படும்.
Next Story






