search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதியில் கோ பூஜையில் தினமும் 3 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு
    X

    திருப்பதியில் கோ பூஜையில் தினமும் 3 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு

    • கோ சாலையில் தினம் தோறும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கோ பூஜை நடைபெறுகிறது.
    • பித்ரு தோஷம், பிரம்ம தோஷம் ஆகியவை நீங்கும் என்பது ஐதீகம்.

    திருப்பதி அலிபிரி அருகே பக்தர்கள் நடைபாதையாக திருமலைக்கு செல்லும் இடத்தில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் கோசலை அமைக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 13-ந் தேதி, ஏகாதசி அன்று திறக்கப்பட்டது.

    கோ சாலையில் ஓங்கோல், அல்லி காரு, கிர், ஹாசிவாதா, காங்கேயன், காங்கேஜ், ராயிடி என 7 வகையான பசுக்கள் உள்ளன.

    கோ சாலையில் தினம் தோறும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கோ பூஜை நடைபெறுகிறது. வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் காலை 7-30 மணி முதல் 9-30 மணி வரை கிருஷ்ணருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. கோ பூஜையில் கலந்து கொண்டால் வீட்டில் சுபிட்சம் உண்டாகும்.

    தோஷங்கள் நீங்கும். மேலும் பித்ரு தோஷம், பிரம்ம தோஷம் ஆகியவை நீங்கும் என்பது ஐதீகம். பூஜையில் கலந்து கொள்ள ரூ.300 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    ஏழுமலையானை தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர். தினமும் கோ பூஜையில் கலந்து கொள்கின்றனர்.

    மேலும் அங்குள்ள பசுக்களுக்கு துலாபாரம் மூலம் எடைக்கு எடையாக புல் வழங்கி வருகின்றனர்.

    Next Story
    ×