என் மலர்
வழிபாடு

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் அஷ்டோத்ர சத கலசாபிஷேகம் 1-ந்தேதி நடக்கிறது
- புஷ்கரணி ஆரத்தி காண்பிக்கப்படுகிறது.
- உற்சவர்களுக்கு ஆஸ்தானம் செய்யப்படுகிறது.
திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந்தேதி காலை 9 மணிக்கு பவுர்ணமியையொட்டி அஷ்டோத்ர சத கலசாபிஷேகம் நடக்கிறது.
மாலை 5.30 மணிக்கு கோவிலின் நான்கு மாட வீதிகள் வழியாக உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர் கோவில் அருகில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா புஷ்கரணிக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஆஸ்தானம் செய்யப்படுகிறது.
அங்கு புஷ்கரணி ஆரத்தி காண்பிக்கப்படுகிறது.
மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.
Next Story






