என் மலர்

  வழிபாடு

  திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்
  X

  திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிரம்மோற்சவ விழா 20-ந்தேதி தொடங்குகிறது.
  • கல்யாண உற்சவம், ஊஞ்சல்சேவை ரத்து.

  திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா வருகிற 20-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு 19-ந்் தேதி காலை லட்சார்ச்சனையும், மாலையில் அங்குரார்ப்பணமும் நடைபெறுகிறது.

  பிரம்மோற்சவத்தையொட்டி கோவில் மாட வீதிகளில் காலை 8 மணி முதல் 10 மணி வரையும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையும் வாகனசேவை நடைபெறுகிறது.

  கார்த்திகை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று காலை 6 மணி முதல் 9 மணி வரை ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. அப்போது கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் உள்ளிட்டவை தண்ணீர் கொண்டு சுத்திகரிக்கப்பட்டன. அதன்பின்னர் நாமகோபு, ஸ்ரீசூர்ணம் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது. ஆழ்வார் திருமஞ்சனம் காரணமாக கல்யாண உற்சவம், ஊஞ்சல்சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது.

  ஐதராபாத்தை சேர்ந்த சுவர்ணகுமார் என்ற பக்தர் 17 திரைச்சீலைகளை கோவிலுக்கு நன்கொடையாக வழங்கினார்.

  நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மரெட்டி, வீரபிரம்மம், கண்காணிப்பாளர் மது, கோவில் ஆய்வாளர் தாமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×