என் மலர்

  வழிபாடு

  திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் ஆதிபுரீஸ்வரர் கவசம் நாளை திறப்பு
  X

  திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் ஆதிபுரீஸ்வரர் கவசம் நாளை திறப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாளை மகா அபிஷேகம் மற்றும் புணுகு சாம்பிராணி தைலாபிஷேகம் நடைபெறும்.
  • வருகிற 9-ந்தேதி வரை 3 நாட்கள் ஆதிபுரீஸ்வரரை கவசமின்றி தரிசிக்க முடியும்.

  திருவொற்றியூர் தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு ஆண்டு முழுவதும் மூல வர் ஆதிபுரீஸ்வரர் தங்க நாக கவசம் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஆண்டுக்கு ஒரு முறை கார்த்திகை மாதம் பவுர்ணமி நாளன்று ஆதிபுரீஸ்வரர் மீது சாத்தப்பட்டிருக்கும் தங்க நாககவசம் திறக்கப்பட்டு 3 நாட்களுக்கு மட்டும் கவசமின்றி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

  இந்த ஆண்டு கார்த்திகை பவுர்ணமி தினத்தையொட்டி நாளை (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு ஆதிபுரீஸ்வரர் மீது சாத்தப்பட்டுள்ள கவசம் திறக்கப்பட்டு மகா அபிஷேகம் மற்றும் புணுகு சாம்பிராணி தைலாபிஷேகம் நடைபெறும். வருகிற 9-ந்தேதி இரவு 8 மணிவரை 3 நாட்கள் ஆதிபுரீஸ்வரரை கவசமின்றி தரிசிக்க முடியும்.

  ஆண்டுக்கொரு முறை 3 நாட்களில் மட்டும் ஆதிபுரீஸ்வரரை கவசமின்றி தரிசிக்க முடியும் என்பதால் இந்த அதிசய நிகழ்வை காண தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் பாஸ்கரன் தலைமையில் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

  Next Story
  ×