என் மலர்
வழிபாடு

திருவரங்கம் பெருமாளின் தேயும் செருப்புகள்
- இரண்டு செருப்பையும் இரண்டு ஊர்களில் தனித்தனியாக செய்வார்கள்.
- இரண்டுமே ஒன்றுபோலவே இருக்கும் என்பதும் அதிசயம்.
திருவரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள, பெருமாள் அணிந்து கொண்டிருக்கும் காலணிகள் தேய்மானத்திற்கு பின் ஸ்ரீரங்கம் திருக்கொட்டாரம் எனும் இடத்தில் தூணில் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை அங்கு சென்றவர்கள் கண்டிருக்கலாம்.
இந்த காலணிகளைச் செய்யவென்றே காலம் காலமாக தனித்த தொண்டர்கள் இருக்கிறார்கள். இரண்டு செருப்பையும் இரண்டு ஊர்களில் தனித்தனியாக செய்வார்கள். இரண்டுமே ஒன்றுபோலவே இருக்கும் என்பதும் அதிசயம்.
6 மாதங்களுக்கு ஒரு முறை இந்த செருப்புகளை அரங்கனின் திருப்பாதத்தில் இருந்து கழற்றுவார்கள். அவை பயன்படுத்தப்பட்டவை போல தேய்மானம் கொண்டிருக்கும் என்பதும் அதிசயம்.
Next Story






