search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சாமி மாடுகளுக்கு வினோத வழிபாடு
    X

    சாமி மாடுகளுக்கு வினோத வழிபாடு

    • கிராமங்களில் இந்த சாமி மாடு வழிபாடு புகழ் பெற்று விளங்குகிறது.
    • பெரும்பாலான பழங்குடியின மக்கள், தங்களுடைய வீடுகளில் சாமி மாடுகளை வளர்த்து வருகின்றனர்.

    தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்று, நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலை. இங்குள்ள பழங்குடியின மக்கள் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சாமி மாடுகளை அலங்கரித்து வீடு, வீடாக சென்று வினோத வழிபாடு நடத்தி வருகின்றனர். கொல்லிமலையில் உள்ள பெரும்பாலான பழங்குடியின மக்கள், தங்களுடைய வீடுகளில் சாமி மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த மாடுகளை உழவுப் பணி மற்றும் இதர விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்துவது இல்லை.

    மார்கழி, தை மாதங்களில் சாமி மாடுகளை அலங்கரித்து, அதிகாலை வேளையில் வீடு, வீடாக அழைத்துச் செல்வார்கள். அப்போது ஆண்கள், பெண் வேடமிட்டு ஒவ்வொரு வீட்டின் முன்பும் நடனம் ஆடுவார்கள். அதன்பிறகு மாடு நிறுத்தப்படும் வீட்டில் உள்ள பெண்கள், சாமி மாட்டை வாழை இலை மீது நிற்க வைத்து அதற்கு பாத பூஜை செய்து வழிபடுவார்கள்.

    தங்கள் வீட்டின் முன்பு சாமி மாடு வந்து சென்றால், துன்பங்கள் குறையும், தோஷம் கழியும், செல்வம் பெருகும் என்பது அங்குள்ள மக்களின் நம்பிக்கையாக உள்ளது. பிற நாட்களை காட்டிலும் தை பொங்கல் அன்று இந்த சாமி மாடு வழிபாடு சிறப்பாக நடத்தப்படுகிறது. கொல்லிமலையில் உள்ள சோழக்காடு, பாப்பங்கையர்பட்டி, நத்துகுழிக்காடு, ஆரியூர்நாடு, விளாரம் உள்ளிட்ட கிராமங்களில் இந்த சாமி மாடு வழிபாடு புகழ் பெற்று விளங்குகிறது.

    Next Story
    ×