search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் மாணிக்க ஸ்ரீபலி விழா நாளை தொடங்குகிறது
    X

    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் மாணிக்க ஸ்ரீபலி விழா நாளை தொடங்குகிறது

    • கார்த்திகை மாதம் முழுவதும் மாணிக்கம் ஸ்ரீபலி விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
    • ஸ்ரீபலி விழா நாளை தொடங்கி டிசம்பர் 15-ந்தேதி வரை நடக்கிறது.

    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முழுவதும் மாணிக்கம் ஸ்ரீபலி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கார்த்திகை மாத மாணிக்க ஸ்ரீபலி விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதி வரை நடக்கிறது.

    இதையொட்டி தினமும் காலை 10.15 மணிக்கு தாணுமாலயசாமிக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனசாத்து, சிறப்பு தீபாராதனை, மாலை 6.30 மணிக்கு கோவில் முழுவதும் அகல் விளக்குகள் ஏற்றுதல், தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு கோவில் திருசுற்றில் ஞானபிரகாசராய் விளங்கும் தாணுமாலய சாமி ரிஷப வாகனத்திலும், தீப பிரகாசமாய் திகழும் திருவேங்கட விண்ண வரம் பெருமாள் கருட வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்துடன் கோவிலை 3 முறை வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும், தாணுமாலய தொண்டர் அறக்கட்டளையினரும் இணைந்து செய்து வருகிறார்கள்.

    இதுபோல் சுசீந்திரம் தெப்பத்தெரு அரசடி விநாயகர் கோவில், சன்னதிதெரு குலசேகர விநாயகர் கோவில், ஆசிராமம் அஞ்சனம் எழுதிய கண்டன்சாஸ்தா கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் கார்த்திகை மாதம் முழுவதும் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறும்.

    Next Story
    ×