search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா 23-ந் தேதி நடக்கிறது
    X

    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா 23-ந் தேதி நடக்கிறது

    • ஆஞ்சநேயருக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடக்கிறது.
    • ஆஞ்சநேயருக்கு புஷ்பாபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது

    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சாமி சிலை உள்ளது. ஆஞ்சநேயருக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று ஜெயந்தி விழா நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டுக்கான ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    இதையொட்டி 22 -ந் தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 8 மணிக்கு நீலகண்ட விநாயகருக்கு அபிஷேகம், 10.30 மணிக்கு தாணுமாலய சாமிக்கு அபிஷேகம், 11.30 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை, மாலை 6 மணிக்கு கால பைரவருக்கு தீபாராதனை நடக்கிறது.

    23-ந்தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவையொட்டி அதிகாலை 5 மணிக்கு ராமபிரானுக்கு அபிஷேகமும், காலை 8 மணிக்கு 18 அடி உயரம் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு நல்லெண்ணெய், ஆயிரக்கணக்கான லிட்டர் பால் மற்றும் தயிர், களபம், சந்தனம், குங்குமம், விபூதி, மஞ்சள், அரிசி மாவு, பன்னீர், எலுமிச்சை பல சாறு, கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம், தேன், மாதுளைச் சாறு உள்பட 16 வகையான பொருட்கள் அடங்கிய சோடச அபிஷேகமும் நடைபெறுகிறது.

    நண்பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும், மாலை 6 மணிக்கு ராமபிரானுக்கு புஷ்பாபிஷேகமும், அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு புஷ்பாபிஷேகமும், 10 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது, பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு, பஞ்சாமிர்தம், விபூதி, குங்குமம் ஆகியவற்றை வழங்குவதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகமும், பக்தர்களும் இணைந்து செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×