search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    செட்டிச்சார்விளை இயேசுவின் தூய குழந்தை தெரசா ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது
    X

    செட்டிச்சார்விளை இயேசுவின் தூய குழந்தை தெரசா ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

    • திருவிழா இன்று தொடங்கி அக்டோபர் 2-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    • 1-ந்தேதி அன்னையின் அலங்கார தேர்பவனி நடைபெறும்.

    அழகியமண்டபம் அருகே உள்ள செட்டிசார்விளையில் இயேசுவின் தூய குழந்தை தெரசா ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இன்று மாலை 6.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறும். தக்கலை மறை மாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் சகாய தாஸ் மறையுரை ஆற்றுகிறார். பங்குத்தந்தை டேவிட் மைக்கேல் முன்னிலை வகிக்கிறார்.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெறும்.

    வருகிற 1-ந் தேதி காலை 7.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் அருட்பணியாளர் யேசு ரத்தினம் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் ரபேல் மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு ஆடம்பர மாலை ஆராதனை நடைபெறும். நிகழ்ச்சியில் அருட்பணியாளர் ஜெபஸ்டின் ஜெரால் தலைமை தாங்குகிறார். மனித உரிமை வக்கீல் அருட்பணியாளர் எம்.சி.ராஜன் மறையுரை ஆற்றுகிறார். தொடர்ந்து இரவு 9 மணிக்கு அன்னையின் அலங்கார தேர்பவனி, வானவேடிக்கை போன்றவை நடைபெறும்.

    திருவிழாவின் இறுதி நாளான 2-ந்தேதி காலையில் ஆடம்பர சிறப்பு திருப்பலி அருட்பணியாளர் திசை ஜெரி தலைமையில் நடைபெறும். தொடர்ந்து மதியம் 12 மணிக்கு அன்பின் விருந்தும், மாலை 6 மணிக்கு மறைக்கல்வி மன்றஆண்டு விழாவும் நடைபெறும்.

    விழா ஏற்பாடுகளை பங்குதந்தை டேவிட் மைக்கேல், இணை பங்கு தந்தை ஏட்வர்ட்லெனின், பங்கு பேரவை உதவி தலைவர் பெலிக்ஸ் ஆன்றோ, செயலாளர் மரிய ராஜேஷ், துணைச் செயலாளர் ஸ்டீபன், பொருளாளர் விமலா மற்றும் பங்கு பேரவை நிர்வாகிகள், பங்கு மக்கள் இணைந்து செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×