என் மலர்
வழிபாடு

புதிய ஆலயத்தை ஆயர் ஜூடு பால்ராஜ் அர்ச்சித்த போது எடுத்த படம்.
மணலிக்கரை புனித சூசையப்பர் ஆலய அர்ச்சிப்பு விழா: 2 ஆயர்கள் பங்கேற்பு
- விழாவில் அன்பின் விருந்து வழங்கப்பட்டது.
- விழாவில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
தக்கலை அருகில் உள்ள மணலிக்கரையில் புனித சூசையப்பர் புதிய ஆலயம் அர்ச்சிப்பு விழா நடந் தது. நிகழ்ச்சியின் தொடக்க நிகழ்ச்சியாக சிறப்பு விருந்தினர்களுக்கு பங்குதந்தை மரிய டேவிட் தலைமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து நடந்த அர்ச்சிப்பு விழாவில் கார்மல் சபையின் தமிழ்நாடு மறை மாநிலத் தலைவர் நேசமணி, குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் அருட்பணியாளர் ஏசு ரெத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய ஆலயத்தை பாளையம்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் அர்ச்சித்து திறந்து வைத்தார்.
தொடர்ந்து அவர் ஆலய பீடம், நற்கருணை பேளை போன்றவற்றை அர்ச்சித்து திருப்பலியை தலைமை ஏற்று நிறைவேற்றினார்.
மார்த்தாண்டம் மலங்கரை கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் மறையுரையாற்றினார். முடிவில் பங்குதந்தை மரிய டேவிட் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை இணைபங்குதந்தை குமார் தொகுத்து வழங்கினார்.
விழாவில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர், விழாவில் அன்பின் விருந்து வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் பங்குதந்தை தலைமையில் செய்யப்பட்டிருந்தது.






