search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பிள்ளைத்தோப்பு புனித சூசையப்பர் ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது
    X

    பிள்ளைத்தோப்பு புனித சூசையப்பர் ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது

    • இந்த விழா மே 7-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    • 6-ந்தேதி புனிதரின் தேர்ப்பவனி நடக்கிறது.

    பிள்ளைத்தோப்பில் புனித சூசையப்பர் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (மே) 7-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    நாளை மாலை 6.30 மணிக்கு கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் கொடியேற்றமும், அதைத்தொடர்ந்து திருவிழா திருப்பலியும் நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலையில் ஜெபமாலை, திருப்பலி, கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    மே 1-ந் தேதி காலை புனித சூசையப்பர் தினத்தை முன்னிட்டு நடைபெறும் திருப்பலியை தொடர்ந்து அன்பு விருந்து நடக்கிறது. அன்று மாலை மாவட்ட அளவிலான நடன போட்டியும் நடைபெறுகிறது.

    3-ந்தேதி மாலை 6.30 மணிக்கு பிள்ளைத்தோப்பு மண்ணின் மைந்தரும், கோவை மறைமாவட்ட ஆயருமான தாமஸ் அக்வினாஸ் தலைமையில் திருப்பலி நடக்கிறது. அதைத் தொடர்ந்து முப்பெரும் விழா மலர் வெளியீட்டு விழாவும், பங்கு வரலாறு ஆவணப்படமும் திரையிடப்படுகிறது.

    6-ந் தேதி காலை 10 மணிக்கு கண் மற்றும் உடல் உறுப்பு தானவிழிப்புணர்வு முகாம் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு ஆராதனையைத் தொடர்ந்து புனிதரின் தேர்ப்பவனி நடக்கிறது.

    7-ந் தேதி காலை 7.15 மணிக்கு கோட்டாறு மறை மாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் பெருவிழா சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது.

    திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜெகன் தலைமையில் பங்கு பேரவை நிர்வாகிகள், பங்கு அருட்பணி பேரவையினர் மற்றும் பங்கு மக்கள் இணைந்து செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×