search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    புத்தன்கடை புனித யாகப்பர் ஆலய திருவிழா தொடங்கியது
    X

    புத்தன்கடை புனித யாகப்பர் ஆலய திருவிழா தொடங்கியது

    • 30-ந்தேதி இரவு 7 மணிக்கு புனித யாகப்பரின் தேர்ப்பவனி நடக்கிறது.
    • 31-ந்தேதி மதியம் கொடியிறக்குதல் நடக்கிறது.

    திருவட்டார் அருகே புத்தன்கடையில் புனித யாகப்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் ெதாடங்கியது. தொடர்ந்து திருப்பலி, மறையுரை போன்றவை நடந்தது. விழாவில் அருட்பணியாளர் ரசல்ராஜ் தலைமை தாங்கினார். கொல்வேல் பங்கு அருட்பணியாளர் ஒய்சிலின் சேவியர் மறையுரையாற்றினார். இரவு இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

    நேற்று அருட்பணியாளர் மார்ட்டின் தலைமையில் திருப்பலி நடந்தது. அருட்பணியாளர் சேவியர்ராஜ் மறையுரையாற்றினார்.

    விழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் கோட்டார் மறை மாவட்ட அருட்பணியாளார் ஜோசப் தலைமையில் முதல் திருவிருந்து வழங்கும் திருப்பலி நடக்கிறது. அருட்பணியாளர் பிலிப் மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து விளையாட்டுப்போட்டிகள், உணவுத்திருவிழா போன்றவை நடைபெறும்.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    30-ந்தேதி காலையில் மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமையில் வெள்ளிவிழா தம்பதியினருக்கான சிறப்புத்திருப்பலி நடைபெறும். மாலையில் ஜெபமாலை, மாலை ஆராதனை, இரவு 7 மணிக்கு புனித யாகப்பரின் தேர்ப்பவனி நடக்கிறது.

    திருவிழாவின் இறுதி நாளான 31-ந் தேதி குழித்துறை மறைவாவட்ட தொடர்பாளார் ஏசு ரெத்தினம் தலைமையில் திருப்பலி நடைபெறும். நாஞ்சில் பால் பண்ணை மேலாளர் அருட்பணியாளார் ஜெரால்டு ஜஸ்டின் மறையுரையாற்றுகிறார். மதியம் கொடியிறக்குதல், அன்பின் விருந்து மாலையில் மறைக்கல்வி மன்ற ஆண்டுவிழா போன்றவை நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை டி. தாமஸ் தலைமையில், அருட்சகோதரிகள், பங்கு அருட்பணிப்பேரவையினர், பங்கு இறைமக்கள், ஊர் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

    Next Story
    ×