search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பொழிக்கரை புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம்: ஏராளமானோர் பங்கேற்பு
    X

    கொடியேற்றத்துடன் தொடங்கிய போது எடுத்த படம்.

    பொழிக்கரை புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம்: ஏராளமானோர் பங்கேற்பு

    • திருவிழா பிப்ரவரி 5-ந்தேதி வரை நடக்கிறது.
    • பிப்ரவரி 4-ந்தேதி புனிதரின் திருவுருவ சப்பரப்பவனி நடக்கிறது

    ஈத்தாமொழி அருகே உள்ள பொழிக்கரை புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று காலை 6.15 மணிக்கு திருப்பலி, மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம் மற்றும் திருப்பலி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கன்னியாகுமரி வட்டார முதன்மை அருட்பணியாளர் எஸ்.பி. ஜான்சன் தலைமை தாங்கினார். மறவன்குடியிருப்பு பங்குத்தந்தை எம். ஜோசப் அருள் ஸ்டாலின் மறையுரையாற்றினார். இதில் பங்கு மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவிழா அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் திருப்பலி, ஜெபமாலை, மறையுரை போன்றவை நடைபெறும்.

    வருகிற 3-ந் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார்.

    4-ந் தேதி இரவு 9 மணிக்கு புனிதரின் திருவுருவ சப்பரப்பவனி நடக்கிறது. விழாவின் இறுதி நாளான 5-ந் தேதி அதிகாலை 5.45 மணிக்கு கோட்டார் மறை மாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஹிலாரியுஸ் தலைமையில் திருப்பலி நடக்கிறது. காலை 8 மணிக்கு நடைபெறும் திருவிழா திருப்பலியில் முட்டம் வட்டார முதன்மை அருட்பணியாளர் டி. ஜான் ரூபஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் தனிஸ்லாஸ் மறையாற்றுகிறார்.

    11 மணிக்கு புனிதரின் தேர் பவனி, மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீர், கொடி இறக்கம் போன்றவை நடைபெறும். நிகழ்ச்சிக்கு பள்ளவிளை பங்குத்தந்தை எல்.பெஞ்சமின் தலைமை தாங்குகிறார். இரவு 9 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஞானசேகரன், பங்கு பேரவை துணைத் தலைவர் எம். சேவியர் மனோகரன், செயலாளர் ஜான் போஸ்கோ, பொருளாளர் சூசை, பங்கு பேரவை உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து செய்துள்ளனர்.

    Next Story
    ×