search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நாகர்கோவில் புனித அல்போன்சா திருத்தல ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது
    X

    நாகர்கோவில் புனித அல்போன்சா திருத்தல ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது

    • விழா நாட்களில் திருப்பலி, மறையுரை, சிறப்பு நவநாள், நற்கருணை போன்றவை நடைபெறும்.
    • வருகிற 31-ந் தேதி வரை விழா நடைபெற உள்ளது.

    நாகர்கோவில் ஏ.ஆர்.பி. கேம்ப் ரோட்டில் புனித அல்போன்சா திருத்தல ஆலயம் உள்ளது. இந்த ஆலய 10 நாள் திருவிழா நாளை (22-ந் தேதி) தொடங்குகிறது. வருகிற 31-ந் தேதி வரை விழா நடைபெற உள்ளது. விழாவின் முதல் நாளில் மாலை 6 மணிக்கு முதல் புனித அல்போன்சா சிறப்பு நவநாள், 6.30 மணிக்கு கொடியேற்றம் போன்றவை நடக்கிறது. இரவு 7 மணிக்கு கூட்டுத்திருப்பலி, மறையுரை நடைபெறும். தக்கலை மறை மாவட்ட குருகுல முதல்வர் தோமஸ் பவுவத்துப்பறம்பில் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார். புன்னைநகர் புனித லூர்து அன்னை ஆலய பங்குத் தந்தை சதீஷ்குமார் ஜாய் மறையுரையாற்றுகிறார்.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் திருப்பலி, மறையுரை, சிறப்பு நவநாள், நற்கருணை போன்றவை நடைபெறும். 24-ந்தேதி காலை 7.30 மணிக்கு அருட்பணி யாளர் ஜோஜி மரங்காட் தலைமையில் ராசாத் திருப்பலி நடக்கிறது. 27-ந்தேதி காலை 10 மணிக்கு அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. 28-ந்தேதி மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. 29-ந் தேதி பங்கு த்தந்தை ஜஸ்டின் செறுவேலில் தலைமையிலும், மறுநாள் (30-ந்தேதி) பங்குத்த ந்தை தோமஸ் தெக்கேதல தலைமை யிலும் ஆட ம்பர கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது.

    விழாவின் இறுதி நாளான 31-ந் தேதி தக்கலை மறை மாவட்ட அருட்பணி யாளர்கள், அருட்சகோதரிகள் மற்றும் பல்வேறு பங்கு களில் இருந்து வரும் பங்குமக்கள் புனித அல்போன்சா திருத்தலம் நோக்கி புனித பயணம் செல்கிறார்கள். அன்று காலை 9 மணிக்கு புனித அல்போன்சா சிறப்பு நவநாள், 9.30 மணிக்கு ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி போன்றவை நடக்கிறது.

    மதியம் 12.30 மணிக்கு தேர்ப்பவனி, 1.30 மணிக்கு நேர்ச்சை விருந்து, மாலை 4 மணிக்கு திருப்பலி போன்றவையும் நடைபெறும். மறையுரைக்குப் பின்னர் திருக்கொடி இறக்கப்படுகிறது. விழா நாட்களில் தினசரி மாலை திருப்பலி முடிந்தவுடன் அருகில் உள்ள ஊர்களுக்குச் செல்ல பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. திருவிழா ஏற்பாடுகளை திருத்தல அதிபர் அருட்பணி யாளர் சனில் ஜோண் பந்திச் சிறக்கல், துணை பங்குதந்தை டோஜி செபாஸ்டின் கொழு வக்கண்டத்தில், விழாக்குழு தலைவர் அகஸ்டின் தறப் பேல், ராஜையன், ஜோ பெலிக்ஸ் மலையில் மற்றும் பங்குமக்கள் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×