search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஆகாச தீபம் ஏற்றி வழிபாடு
    X

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஆகாச தீபம் ஏற்றி வழிபாடு

    • கோவிலுக்குள் கார்த்திகை தீபம் ஏற்ற தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
    • நாகசதுர்த்தியையொட்டி கோவிலில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கிறது.

    தெலுங்கு கார்த்திகை மாதம் 3-வது நாள் வெள்ளிக்கிழமை வந்ததால் நேற்று ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகாலையில் இருந்து இரவு வரை அலைமோதியது. கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் நிரம்பி வழிந்தனர். பக்தர்களுக்கு போதிய ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நிர்வாக அதிகாரி சாகர்பாபு கூறியதாவது:-

    தெலுங்கு கார்த்திகை மாதத்தில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்குள் கார்த்திகை தீபம் ஏற்ற தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. கோவிலின் தூய்மையை பாதுகாக்கும் வகையில் கோவிலுக்கு வெளியில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போலவே தீபங்கள் ஏற்றுவதற்கு கோவிலின் 3-வது கோபுரம் அருகில் உள்ள நாகாலம்மன் புற்று அருகில் தீபங்கள் ஏற்றலாம். இதேபோல் பிக்சால காளி கோபுரம் நுழைவு வாயில் மற்றும் 2-வது கோபுரம் முன்பு பக்தர்கள் தீபங்களை ஏற்றுவதற்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறோம்.

    நாகசதுர்த்தியையொட்டி கோவிலில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கிறது. கோவில் வளாகத்தில் உள்ள பாம்புபுற்று அருகில் வழிபாடு நடத்தலாம். கார்த்திகை மாத வெள்ளிக்கிழமையையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபம் அருகில் ஆகாச தீபத்தை அறங்காவலர் குழு தலைவர் அஞ்சுரு.தாரக சீனிவாசுலு ஏற்றினார். அங்கு சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×