search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    செல்லியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா
    X

    செல்லியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா

    • தினமும் செல்லியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • தேங்காய் உடைத்து பொதுமக்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    முதுகுளத்தூர் வடக்கு வாசல் செல்லியம்மன் கோவில் ஐப்பசி மாத பொங்கல் விழாவை முன்னிட்டு மறவர் சங்கம் சார்பில் முளைப்பாரி விழா நடந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் செல்லியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் பல்வேறு வகையான போட்டியிலும் நடைபெற்றது.

    மேலும் செல்லியம்மன் கோவிலில் பொங்கல் வைத்தும் ஆயிரக்கணக்கில் தேங்காய் உடைத்தும் பொதுமக்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைத்தொடர்ந்து கடலாடி ரோட்டில் உள்ள முலைக்கொட்டும் திண்ணையில் இருந்து காந்தி சிலை பஸ் நிலையம் வழியாக மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் செல்லியம்மன் கோவிலுக்கு முளைப்பாரியுடன் வந்தனர்.

    பின்பு செல்லி அம்மனுக்கு மஞ்சள், பால் பன்னீர் உள்பட 21 வகையான அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து முளைப்பாரியை சங்கரபாண்டி ஊருணியில் கரைத்தனர். விழா ஏற்பாடுகளை கடலாடி ரோட்டில் உள்ள வசிக்கும் மறவர் சங்க நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×