search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சீர்காழி சட்டை நாதர்கோவிலில் பஞ்சமூர்த்திகள் புஷ்ப பல்லக்கில் வீதி உலா
    X

    பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்த போது எடுத்த படம்.

    சீர்காழி சட்டை நாதர்கோவிலில் பஞ்சமூர்த்திகள் புஷ்ப பல்லக்கில் வீதி உலா

    • இக்கோவிலில் திருஞானசம்பந்தர், அஷ்ட பைரவர்களுக்கு தனி சன்னதி உள்ளது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். மேலும் இங்கு சிவபெருமான் மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    திருஞானசம்பந்தர் இத்தலத்தில் உமையம்மை அளித்த ஞான பாலினை அருந்தி தனது மூன்றாவது வயதில் தேவாரத்தின் முதல் பதிகமான தோருடைய செவியன் என்ற பதிகத்தை பாடினார் என்பது வரலாறு. மேலும் இக்கோவிலில் திருஞானசம்பந்தர், அஷ்ட பைரவர்களுக்கு தனி சன்னதி உள்ளது.

    இக்கோவிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று முன்தினம் குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து இரவு விநாயகர், வள்ளி தெய்வானை உடனடியாக முருகப்பெருமான், சுவாமி-அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    தொடர்ந்து பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளினர். தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில், சிறப்பு நாதஸ்வர கச்சேரி, நாட்டிய நிகழ்வுடன் புஷ்பப் பல்லக்கில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது. தேரோடும் நான்கு வீதிகளிலும் பஞ்சமூர்த்தி சுவாமிகள் வலம் வந்து கோவிலை வந்தடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×