search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அப்பலாயகுண்டா கோவிலில் புஷ்ப யாகம்
    X

    அப்பலாயகுண்டா கோவிலில் புஷ்ப யாகம்

    • உற்சவ மூர்த்திகள் வீதி உலா வந்தனர்.
    • 14 வகையான பூக்கள் மற்றும் இலைகள் பயன்படுத்தப்பட்டன.

    திருப்பதி மாவட்டம் அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மே மாதம் 31-ந்தேதியில் இருந்து ஜூன் மாதம் 8-ந்தேதி வரை நடந்தது. கோவிலில் நடந்த நித்ய கைங்கர்யங்கள், பிரம்மோற்சவ விழாவில் அர்ச்சகர்கள், அதிகாரிகள், பக்தர்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்காக நேற்று கோவிலில் புஷ்ப யாகம் நடத்தப்பட்டது.

    உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, பிரசன்ன வெங்கடேஸ்வரருக்கு பால், தயிர், தேன், சந்தனம், இளநீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. புஷ்ப யாகத்துக்கு பயன்படுத்தப்பட்ட மலர்கள் கோவிலில் உள்ள மூலமூர்த்தியிடம் வைத்து சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது.

    அதன் பிறகு மலர் கூடைகளை கோவிலின் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக பிரத்யேக மேடைக்கு எடுத்து வந்தனர். உற்சவ மூர்த்திகளும் வீதி உலா வந்தனர். மதியம் அர்ச்சகர்கள் வேத மந்திரங்களை ஓத மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க புஷ்ப யாகம் நடந்தது.

    அதில் துளசி, சாமந்தி, கன்னேறு, மொகலி, சம்பங்கி, ரோஜா என 14 வகையான பூக்கள் மற்றும் இலைகள் பயன்படுத்தப்பட்டன. அதன்பிறகு கோவிலின் நான்கு மாட வீதிகளில் பெரிய சேஷ வாகனத்தில் உற்சவர்கள் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    Next Story
    ×