search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட இறைவன்
    X

    பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட இறைவன்

    • சிவப்பெருமானின் 64 திருவிளையாடல்கள் குறிப்பிடத்தக்கவை..
    • பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட இறைவன் கதையை அறிந்து கொள்ளலாம்.

    சுந்தரேசுவரர் பெருமானின் பிட்டுக்கு மண் சுமந்த லீலை பற்றி புராணங்களில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    முன்பொரு காலத்தில் மன்னர் அரிமர்த்தன பாண்டியன் மதுரையை ஆண்டு வந்தான். அப்போது மணிவாசகர் அழைத்து வந்த குதிரைகள் அனைத்தும் நரிகளாக மாறியது. எனவே கோபம் அடைந்த மன்னன் வைகை ஆற்றில் கொதிக்கும் மணலில் நிற்க வைத்தான். அப்போது இறைவனின் திருவருளால், வைகை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால் மதுரை அழியும் அபாயம் ஏற்பட்டது. எனவே 'வீட்டுக்கு ஒருவர் மண் சுமந்து வைகைக் கரையை வலுப்படுத்த வேண்டும்' என்று மன்னன் ஆணையிட்டான்.

    மதுரை நகரின் கீழ்த் திசையில் வசித்து வந்த பிட்டு விற்கும் மூதாட்டி 'வந்திக்கு குழந்தைகள் இல்லை. எனவே வைகை கரையை வலுப்படுத்த யாரை அனுப்புவது? என்று மூதாட்டி யோசித்துக் கொண்டு இருந்தாள். அப்போது அடியவருக்கு அருளும் இறைவன், வந்திக்கும் அருள்செய்ய எண்ணினார். அதன்படி அவர் கூலி ஆளாக வந்தியிடம் வந்து சேர்ந்தார். மூதாட்டியிடம் கூலியாகப் பிட்டைப் பெற்றுக்கொண்ட இறைவன், மண்வெட்டியுடன் வைகை நதிக்கு சென்றார்.

    அங்கு அவர் நீரில் குதித்து விளையாடிக் கொண்டிருந்ததால் காவலர்கள் இறைவனின் முதுகில் தங்கப் பிரம்பால் ஓங்கி அடித்தார்கள். அப்போது இறைவன் மீது பட்ட பிரம்பு அடி, மன்னன் உட்பட உலக மக்கள் அனைவர் மீதும் விழுந்தது. அதன் பிறகு மாயமான இறைவன், வானத்தில் மீண்டும் தோன்றி வந்தி மூதாட்டிக்கு அருள் புரிந்து, அவளை வானுலகம் அழைத்துச் சென்றார். சோமசுந்தரப் பெருமானின் திருவிளையாடலைக் கண்ட மன்னன், மணிவாசகப் பெருமானை சிறையிலிருந்து விடுவித்தான்.

    Next Story
    ×