search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பஞ்ச பாண்டவர்கள் தங்க வனப்பகுதியை எரித்த அம்மன்
    X

    காலமா மகரிஷி கோவில்

    பஞ்ச பாண்டவர்கள் தங்க வனப்பகுதியை எரித்த அம்மன்

    • அறந்தாங்கி அருகே உள்ள கிராமம்தான் எரிச்சி.
    • பஞ்ச பாண்டவர்கள் வழிபாடு நடத்தியிருக்கின்றனர்.

    அறந்தாங்கி அருகே உள்ள கிராமம்தான் எரிச்சி. முன்னொரு காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் அறந்தாங்கி பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது அறந்தாங்கியில் வீற்றிருக்கும் வீரமாகாளியம்மன், அவர்களிடம் 'நீங்கள் தங்க வேண்டிய இடம்' என்று கையை நீட்டி ஒரு வனப்பகுதியை சுட்டி காட்டியதாகவும், அந்த வனப்பகுதி தீயினால் எரிந்ததாகவும், அந்த இடத்தில் பஞ்ச பாண்டவர்கள் தங்கி வழிபாடு நடத்தும்படி அம்மன் கூறியதாகவும், இதனால் அந்த இடத்திற்கு எரிச்சி என பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதேபோல் அதே கிராமத்தின் அருகே நற்பவளக்குடி கிராமத்தில் உள்ள கலியுக மெய்யர் அய்யனார் கோவிலில், பஞ்ச பாண்டவர்கள் வழிபாடு நடத்தியிருக்கின்றனர்.

    அதன் அருகே இருந்த நச்சு பொய்கையை (குளம்) சுத்தமான தண்ணீராக மகா முனிவர் காலமா மகரிஷி மாற்றிக்கொடுத்ததாகவும் புராணங்களில் கூறப்படுகிறது. அந்த குளம் தற்போதும் உள்ளது.

    Next Story
    ×