search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பூண்டி அருகேவாழ் முனீஸ்வரர் கோவிலில் தீமிதி திருவிழா
    X

    திருப்பூண்டி அருகேவாழ் முனீஸ்வரர் கோவிலில் தீமிதி திருவிழா

    • திருப்பூண்டியை அடுத்த மகிழி கிராமத்தில் பழமை வாய்ந்த வாழ்முனீஸ்வரர் கோவில் உள்ளது.
    • இந்த கோவிலில் 32 அடி உயரத்தில் வாழ்முனீஸ்வரரின் பிரமாண்ட சிலை உள்ளது.

    நாகை மாவட்டம் திருப்பூண்டியை அடுத்த மகிழி கிராமத்தில் பழமை வாய்ந்த வாழ்முனீஸ்வரர் மற்றும் காதாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 32 அடி உயரத்தில் வாழ்முனீஸ்வரரின் பிரமாண்ட சிலை உள்ளது.

    இந்த கோவிலில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு காலையில் காவடி அபிஷேகம், திருமுழுக்கும், மாலையில் பூந்தேரும், பூங்கரகமும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தீமிதி திருவிழா நடந்தது.

    இதையொட்டி கோவில் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை ஆய்வாளர் கமலச்செல்வி, செயல் அலுவலர் சண்முகராஜ் (கூடுதல்பொறுப்பு) மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×