search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    புன்னைநகர் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது
    X

    புன்னைநகர் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

    • திருவிழா இன்று தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • 29-ந்தேதி தேர்பவனி நடக்கிறது.

    புன்னைநகர் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.30 மணிக்கு பங்குதந்தையின் வகுப்பு தோழர்கள் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றுகிறார்கள். தொடர்ந்து திருப்பலி, இரவு 9 மணிக்கு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.30 மணிக்கு திருப்பலி, இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழாவில் 29-ந்தேதி காலை 6 மணிக்கு தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரி செயலாளர் அருட்பணியாளர் அருள்தேவதாசன் தலைமை தாங்கி முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றுகிறார். கோத்தகிரி கப்புச்சின் சபை அருட்பணியாளர் அல்பரிக் நிமலன் மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு திருச்சி தூய பவுல் குருத்துவக்கல்லூரி பேராசிரியர் அருட்பணி ஆல்பர்ட் அலெக்சாண்டர் தலைமை தாங்கி சிறப்பு மாலை ஆராதனை நிறைவேற்றுகிறார். மறைமாவட்ட இளைஞர் இயக்க பணிக்குழு இயக்குனர் ஜெனிபர் எடிசன் மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு தேர்பவனி நடக்கிறது.

    விழாவின் இறுதி நாளான காலை 6 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்கி திருவிழா சிறப்பு திருப்பலியை நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார். 10 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலி, மாலை 5 மணிக்கு நற்கருணை ஆசீர், 6 மணிக்கு கொடியிறக்கம் ஆகியவை நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை தலைமையில் பங்கு இறைமக்கள், பங்கு அருட்பணிபேரவை, அருட்சகோதரிகள் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×