என் மலர்

  வழிபாடு

  கார்த்திகை தீபம் - அரிய தகவல்கள்
  X

  கார்த்திகை தீபம் - அரிய தகவல்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அகல், எண்ணெய், திரி, சுடர் ஆகிய நான்கும் விளக்காகிறது.
  • கார்த்திகை மாதம் முழுவதுமே விளக்குகளை ஏற்றுவது நல்லது.

  கார்த்திகை சீர்

  கார்த்திகை தீபத்தைக் கொண்டாடுவதில் பெண்களே அதிகமான ஆர்வம் காட்டுகின்றனர். பெண்களுக்கு "கார்த்திகைச் சீர்" கொடுப்பதை மகிழ்ச்சியான கடமையாக சகோதரர்கள் கருது கின்றனர். கல்யாணமோ கார்த்திகையோ! என்று இந்தப் பண்டிகையை சுபமங்கள வைபவமாக கொண்டாடுகின்றனர்.

  பெரிய கார்த்திகை

  பண்ணிரெண்டு தமிழ் மாதங்களிலும் கிருத்திகை வருகிறது. எனினும் கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியுடன் சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ஆகவே, இதனை, "பெரிய கார்த்திகை" என்று போற்றுகின்றனர். கார்த்திகை மாதம் முழுவதுமே தினசரி மாலையில் அகல் விளக்குகளை ஏற்றுவது நல்லது. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இவ்வழக்கம் இன்றும் உள்ளது.

  தீப ஒளி ஏன் ?

  ஐப்பசி மாதம் முழுவதும் அடைமழைக் காலமாகும். இதனால் மழை ஓய்ந்த பிறகு நோய்க் கிருமிகள் உற்பத்தியாகிவிடும். அவை வளர்ச்சி அடைந்து மார்கழியில் காலரா முதலான நோய்களை ஏற்படுத்தும். கார்த்திகை விழாவில் இல்லந்தோறும் நூற்றுக் கணக்கில் நல்லெண்ணை தீபங்களை ஏற்றினால் நோய்க் கிருமிகள் நம் அருகில் வராமல் விரட்டி விடலாம். இது நம் முன்னோர் கண்டு பிடித்த ஆச்சரியமான அறிவியல் உண்மையாகும். கோயில்களில் ஆயிரக்கணக்கான தீபங்களை ஏற்றுகின்றனர். இவற்றின் சுடரின் பயனாக நோய்க்கிருமிகள் அழிந்து போகின்றன.

  விளக்கு வந்த கதை

  மனித நாகரிகத்தின் வளர்ச்சியே, அவன் விளக்கைக் கண்டு பிடித்த நாளில் தான் தொடங்கியது. மரக்கட்டைகளையும், விலங்குகளின் கொழுப்பையும் கொண்டு ஆதிமனிதன் விளக்கேற்றினான். பின்னர் சங்கு, கிளிஞ்சல் போன்ற பொருட்களை விளக்கு ஆக்கினார்கள். அதன்பின் மனிதன் கண்டு பிடித்த அகல்விளக்கு இன்று வரை பயன்பட்டு வருகிறது.

  எது விளக்காகிறது?

  அகல், எண்ணெய், திரி, சுடர் ஆகிய நான்கும் விளக்காகிறது. அதுபோல் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் வாழ்க்கையின் பலன்கள் ஆகும். அவற்றைச் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு வழிகளால் பெறலாம். நமிந்தி அடிகள், கலியநாயனார் போன்றவர்கள் திருவிளக்கேற்றும் திருப்பணியைச் செய்து இறைவன் அருளைப் பெற்றனர்.

  குப்பைக் கார்த்திகை

  கார்த்திகைப் பண்டிகையின் முதல் நாள் பரணி தீபம். இரண்டாம் நாள் கார்த்திகைத் தீபத்திருவிழா. மூன்றாம் நாள் "குப்பைக் கார்த்திகை" என்று கொண்டாடப்பட வேண்டும். அன்று, மாட்டுக் கொட்டகை, கொல்லைப்புறம், குப்பைத் தொட்டி ஆகிய எல்லா இடங்களிலும் அகல் விளக்குகளை ஏற்றுவதை தமிழர்கள் பல நூற்றாண்டு பாரம்பரிய பழக்கமாக வைத்துள்ளனர்.

  Next Story
  ×