search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை
    X

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை

    • அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடைபெற்றது.
    • ஸ்ரீ பலி பூஜை, உச்சிகால பூஜை, தீபாராதனை நடைபெற்றது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆவணி மாத பவுர்ணமியையொட்டி நேற்று பூஜை நடந்தது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம், அம்மனுக்கு அபிஷேகமும், காலை 7 மணிக்கு ஸ்ரீ பலி பூஜை, உச்சிகால பூஜை, தீபாராதனை நடைபெற்றது. 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், 11 மணிக்கு தங்க ஆபரணங்கள் மற்றும் வைர கிரீடம், வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அதைத்தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜையும் பின்னர் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி கோவில் பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க மூன்று முறை வலம் வரும் நிகழ்ச்சியும், இரவு 8.30 மணிக்கு அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

    Next Story
    ×