search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    காளிகாம்பாள், தேவி கருமாரியம்மன், மாங்காடு கோவில்களில் இன்று 108 திருவிளக்கு பூஜை
    X

    காளிகாம்பாள், தேவி கருமாரியம்மன், மாங்காடு கோவில்களில் இன்று 108 திருவிளக்கு பூஜை

    • தமிழகம் முழுவதும் 12 கோவில்களில் திருவிளக்கு பூஜை நடக்கிறது.
    • இன்று மாலை 5 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது.

    சென்னை :

    இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மாதம் தோறும் பவுர்ணமி அன்று தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோவில்களில் 108 திருவிளக்கு பூஜை நடத்தப்படும் என்று சட்ட சபையில் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்தார்.

    அதன்படி தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோவில்களில் இன்று மாலை 5 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடை பெற உள்ளது.

    சென்னையில் பாரிமுனை காளிகாம்பாள் கோவில், திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவில், மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் ஆகிய 3 கோவில்களில் திருவிளக்கு பூஜை நடக்கிறது.

    மேலும் தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில், பண்ணாரி மாரியம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில், திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களிலும் 108 திருவிளக்கு பூஜை நடக்கிறது.

    இந்த பூஜையில் பங்கேற்கும் பெண்களிடம் இருந்து மொத்த செலவில் 4-ல் ஒரு பங்கு தொகையாக தலா ஒருவரிடம் ரூ.200 மட்டும் வசூலிக்கப்படுகிறது. திருவிளக்கு பூஜையில் பங்கேற்கும் பெண்களின் புகைப்படம், முகவரி, செல்போன் எண், ஆதார் எண் ஆகியவற்றுடன் கூடிய பட்டியலை அந்தந்த கோவில்கள் பராமரிக்க வேண்டும் என்றும், ஒரு பூஜையில் பங்கேற்ற பெண்கள் அடுத்து வரும் பூஜைகளில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அறநிலையத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    இந்த 12 கோவில்களிலும் 108 திருவிளக்கு பூஜையை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழு அளவில் செய்யப்பட்டு வருகின்றன.

    திருவிளக்கு பூஜையில் பங்கேற்கும் பெண்களுக்கு 125 கிராம் பித்தளை காமாட்சி விளக்கு, எவர்சில்வர் குங்குமச்சிமிழ், மஞ்சள், குங்குமம், கற்பூரம், ஊதுவத்தி, தீப்பெட்டி, தாலிக்கயிறு செட், விளக்கு திரி, தையல் இலை, வெற்றிலை, பாக்கு, தேங்காய், வாழைப்பழம், எலுமிச்சை பழம், பூச்சரம், பூக்கள், 500 கிராம் பச்சரிசி, 100 மில்லி தீப எண்ணெய், பூஜை பை, சர்க்கரை பொங்கல் அல்லது புளியோதரை பிரசாதம், சேலை, ஜாக்கெட் துணி என ரூ.800 மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

    Next Story
    ×