search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் 3 மாத கொடிக்கம்பம் ஏற்றும் நிகழ்ச்சி
    X

    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் 3 மாத கொடிக்கம்பம் ஏற்றும் நிகழ்ச்சி

    • இந்த ஆண்டு திருவிழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
    • நூற்றுக்கணக்கான பக்தர்கள் பின் தொடர்ந்து வந்தனர்.

    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் வைகாசி அமாவாசைக்கு பின்னர் வரும் திங்கட்கிழமை திருவிழா கொடியேற்றம் நடைபெறும். இதைத்தொடர்ந்து 17 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறும்.

    பங்குனி மாத அமாவாசைக்கு பின்னர் வரும் திங்கட்கிழமை சுற்றுப்புற கிராம பக்தர்களுக்கு திருவிழா நடத்துவதற்கு முன்பு அறிவிப்பாக 3 மாத கொடியேற்று விழா நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்கான 3 மாத கொடியேற்று விழா நேற்று இரவு நடந்தது. நேற்று மாலை வாணவேடிக்கை, மேளதாளத்துடன் சண்முகவேல் அர்ச்சகர் 3 மாத கொடிக்கம்பத்தை எடுத்து வந்தார்.

    இவருடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பின் தொடர்ந்து வந்தனர். இந்த 3 மாத கொடி கம்பம் கடைவீதி, தெற்குரதவீதி, மேலரதவீதி, வழியாக வைகைஆற்றுக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு பூஜைகள் நடந்தது. இதை தொடர்ந்து வடக்குரதவீதி, கடைவீதி, மாரியம்மன் சன்னதி வந்து கோவில் முன்பாக உள்ள கொடிபீடத்தில் 3 மாத கொடி ஏற்றும் விழா நடந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை செயல்அலுவலர் இளமதி, கோவில் பணியாளர்கள் மற்றும் உபயதாரர் சோழவந்தான் காவல் ராசுஅம்பலம் குடும்பத்தினர் செய்திருந்தனர். சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×