search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கண்ணுகுடி திரவுபதியம்மன் கோவிலில் தீ மிதியல் தூக்குதேர் திருவிழா
    X

    கண்ணுகுடி திரவுபதியம்மன் கோவிலில் தீ மிதியல் தூக்குதேர் திருவிழா

    • இன்று கலைநிகழ்ச்சி நடக்கிறது.
    • நாளை திருவிளக்கு பூஜை நடக்கிறது.

    தஞ்சை மாவட்டம் கண்ணுகுடியில் திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தீமிதியல் தூக்கு தேர் திருவிழாவையொட்டி கடந்த 17-ந்தேதி சீர்காழி ராம்ராஜ் பாகவதர் வழங்கும் அர்ச்சனன் தவசு நாடகம் நடைபெற்றது. 18-ந்தேதி அரவோன் களப்பலி நாடகம் நடைபெற்றது.

    நேற்று காலை 10 மணிக்கு லண்டன் வாழ் நண்பர்கள் வழங்கும் தமிழர் பண்பாட்டு கிராமிய கலைநிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு படுகளம் கூந்தல் முடித்தல் நாடகம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு வாணவேடிக்கையுடன் தேர் உலா வருதலும், 5 மணிக்கு தீமிதியில் தூக்கு தேர் திருவிழாவும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    விழாவில் இன்று(செவ்வாய்க்கிழமை) சிங்கப்பூர் வாழ் நண்பர்கள் கலைநிகழ்ச்சி நடக்கிறது. நாளை(புதன்கிழமை) இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜையும், டிஜிட்டல் மகாபாரதமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கண்ணுகுடி பஞ்சாயத்தார்கள், கிராமமக்கள், இளைஞர்கள் செய்து இருந்தனர்.

    Next Story
    ×