என் மலர்tooltip icon

    வழிபாடு

    அழகு நாச்சியம்மன் கோவில் குண்டம் திருவிழா
    X

    அழகு நாச்சியம்மன் கோவில் குண்டம் திருவிழா

    • பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர்.
    • இன்று மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.

    ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளி பகுதியில் அழகு நாச்சியம்மன் ்கோவில் உள்ளது .இக்கோவிலில் ஆண்டுதோறும் பொங்கல் மற்றும் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் நேற்று குண்டம் மற்றும் பொங்கல் திருவிழா நடைபெற்றது. முன்னதாக கடந்த மாதம் 24-ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தது.

    நேற்று முன் தினம் மதியம் ஒரு மணிக்கு பொங்கல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு திருகுண்டம் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு கிராம தேவதைகளுக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்கு மேல் திருகுண்டம் பூ மிதித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து மாவிளக்கு பூஜை பொங்கல் வைத்தல் மற்றும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு படைக்கலாம் வீடு திரும்புதால் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இன்று (வெள்ளிக்கிழமை) மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது. திருவிழா ஏற்பாடுகளை செங்கப்பள்ளி மற்றும் முத்தம்பாளையம் ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். திருவிழாவை ஒட்டி கலை நிகழ்ச்சிகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஊத்துக்குளி போலீசார் செய்திருந்தனர்.

    Next Story
    ×