search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சதுர்சனி தோஷ நிவாரண மாங்குளம் பராசக்தி கோவிலில் அஹோர சனீஸ்வர யாகம்
    X

    மகாகாலேஸ்வரர் விக்ரகம் மற்றும் மகா சிவலிங்கம், கொல்லூர் மூகாம்பிகை கோவில் தந்திரி ராமசந்திர அடிகள்

    சதுர்சனி தோஷ நிவாரண மாங்குளம் பராசக்தி கோவிலில் அஹோர சனீஸ்வர யாகம்

    • இந்த யாகம் இன்று முதல் 4 நாட்கள் நடக்கிறது.
    • உக்ரமூர்த்தியை மகிழ்விக்க இந்த மகாகாலேஸ்வர யாகம் நடத்தப்படுகிறது.

    திருவனந்தபுரம் பட்டம் மாங்குளத்தில் ஸ்ரீபராசக்தி தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 6-ந் தேதி முதல் மகாகாலேஸ்வர யாகம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, சதுர்சனி தோஷ நிவாரணத்திற்கான அஹோர மகா சனீஸ்வர யாகம் இன்று (சனிக்கிழமை) தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது. இந்த யாகத்திற்கு, சனீஸ்வர பாபா என்றழைக்கப்படும், மகாமண்டேஸ்வரர் தேவேந்திரர் சுவாமிகள் தலைமை தாங்குகிறார்.

    இதன் தொடர்ச்சியாக நாளை 14-ந்தேதி முதல் 16-ந் தேதி வரை நடைபெறும் மகாகாளீஸ்வரி யாகத்திற்கு, கொல்லூர் முகாம்பிகை கோவில் தலைமை தந்திரி ராமச்சந்திர அடிகள் தலைமை தாங்குகிறார். பாரதத்தின் 12 ஜோதிர்லிங்க சிவன் கோவில்கள் மற்றும் பல்வேறு ஆசிரமங்களின் ஆச்சார்யர்களின் சங்கம பூமியாக பராசக்தி தேவி கோவில் தற்போது மாறியுள்ளது. மகாகாலேஷ்வர யாகம் 56,008 ருத்ர யாகங்களுக்கும் 11,000 ஏகாதச ருத்ர யாகங்கள் மற்றும் 81,000 மிருதயுஞ்சய யாகங்களுக்கும் சமமானதாக கருதப்படுகிறது. உக்ரமூர்த்தியை மகிழ்விக்க இந்த மகாகாலேஸ்வர யாகம் நடத்தப்படுகிறது.

    ஆச்சார்ய ஸ்ரீ யாக பிரம்மன் ஆனந்த் நாயர் அனைத்து யாக நாட்களிலும் மாலையில் விபூதி அபிஷேகம் நடத்தி வருகிறார்.

    அனந்தபுரியின் முகாம்பிகை என்று அழைக்கப்படும் பட்டம் மாங்குளம் ஸ்ரீபராசக்தி கோவிலில் நடைபெறும் யாகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வருகிறார்கள். அஹோர மஹா சனீஸ்வர யாகம் இன்று தொடங்குகிறது. 16-ந்தேதி வரை நடைபெறும் சனிதோஷ நிவாரணம் வேண்டி மந்திரங்கள் ஒதப்படும். யாகத்திற்கு வரும் பக்தர்கள் தெளிந்த மனதுடனும் உயர்ந்த எண்ணங்களுடனும் வீடு திரும்ப இந்த யாகம் பயன் அளிக்கிறது.

    மேலும் யாக நாட்களில் சகல தோஷங்களும் நீங்க மஹாகாலேஷ்வர திரவ்ய சமர்ப்பணம் நடைபெறும்.

    மகாகாலேஸ்வரரையும், சனீஸ்வரரையும் மகிழ்விப் பதன் மூலம் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    ஸ்ரீ பராசக்தி கோவிலில் நடைபெற்று வரும் மகா காலேஸ்வரயாகம் தலைமை புரவலர் அவிட்டம் திருநாள் ஆதித்ய வர்மா, யாக ஒருங்கிணைப்பு தலைவர் ஆனந்த் நாயர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் சி. சுரேந்திரன் நாயர், டாக்டர். ஜே.ராஜ் மோகன் பிள்ளை, அரவிந்த் மோகன், ஆர்.விஸ்வநாதன், எஸ். கவுதமன், டி.சஜீவ், சி.கே.ஜெயமோகன், பொருளாளர் சுஜித் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

    Next Story
    ×