search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதியில் இலவச தரிசனத்தில் பக்தர்களுக்கு நேரம் ஒதுக்கீடு டோக்கன் வழங்குவது குறித்து ஆலோசனை
    X

    திருப்பதியில் இன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடந்த காட்சி.

    திருப்பதியில் இலவச தரிசனத்தில் பக்தர்களுக்கு நேரம் ஒதுக்கீடு டோக்கன் வழங்குவது குறித்து ஆலோசனை

    • வருடாந்திர பிரம்மோற்சவம் செப்டம்பர் 27-ம்தேதி முதல் அக்டோபர் 5-ம்தேதி வரை நடக்கிறது.
    • திருமலை ஆனந்த நிலையத்துக்கு தங்க முலாம் பூசுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

    திருப்பதி, ஜூலை.12-

    திருப்பதி அன்னமய்ய பவனில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அறங்காவலர் குழு உறுப்பினர் கள் அனைவரும் பங்கேற்றனர். கூட்டம் முடிந்தபின் அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி கூறியதாவது:-

    ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5 வரை நடைபெற உள்ளது.

    பிரம்மோற்சவத்தின் முதல் நாள் கொடியேற்றத்தையொட்டி, மாநில அரசு சார்பில், ஏழுமலை யானுக்கு பட்டு வஸ்திரங்கள் வழங் கப்படும். திருமலை ஏழுமலையான் கோயில் ஆனந்த நிலையத்துக் குத் தங்க முலாம் பூசுவது குறித்து ஆகம பண்டிதர்களுடன் ஆலோ சித்து முடிவு எடுக்கப்படும்.

    நெல்லூரில் ஆகஸ்ட் 16 முதல் 20-ஆம் தேதி வரை ஸ்ரீ வெங் கடேஸ்வரா வைபவோற்சவம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் டோக்கன் இன்றி நேரடியாக தரிசனத் துக்கு அனுப்பப்படுவது தொடர்கிறது. பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் தரிசனம் வழங்க முயற்சித்து வருகிறோம். திருப்பதியில் டைம்ஸ்லாட் கவுன்ட்டர் கள் அமைப்பது குறித்து விரிவான ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத் தரவிட்டுள்ளோம்.

    அமராவதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் ரூ.2.90 கோடியில் மலர் தோட்டங்கள் மற்றும் பசுமை வளர்ப்புக்கு ஒப் புதல் வழங்கப்பட்டுள்ளது. திருமலையில் உள்ள ஸ்ரீ பேடி ஆஞ்சநேயசுவாமி மூலமூர்த் தியின் செப்புக் கவசங்களுக்கு தங்க முலாம் பூசும் பணி ரூ.18.75 லட்சத்தில் மேற்கொள்ளப்படுகிறது என்றார். *** ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி திருப்பதியில் இன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. இதையொட்டி கோவில் கொடிமரம் சுத்தம் செய்யப்பட்டது.

    Next Story
    ×