search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாதேகவுண்டன் புதூரில் காலபைரவர் ஜென்மாஷ்டமி விழா நடைபெற்றபோது எடுத்த படம்.
    X
    நாதேகவுண்டன் புதூரில் காலபைரவர் ஜென்மாஷ்டமி விழா நடைபெற்றபோது எடுத்த படம்.

    நாதே கவுண்டன் புதூரில் காலபைரவர் ஜென்மாஷ்டமி

    நாதே கவுண்டன் புதூரில் காலபைரவர் ஜென்மாஷ்டமியை முன்னிட்டு பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த கலசங்கள் மூலம் தங்கள் கரங்களால் காலபைரவருக்கு அபிஷேகம் செய்தனர்.
    கோவையை அடுத்த ஆலாந்துறை அருகே உள்ள நாதே கவுண்டன் புதூரில் காலபைரவர் ஜென்மாஷ்டமி விழா நடைபெற்றது. அங்கு அமைக்கப்பட்ட விழா அரங்கில் காலை 9 மணிக்கு மஹா கணபதி வேள்வியும், 10 மணிக்கு 152 தம்பதிகள் பூஜை, 152 மகாயாகம், அபிஷேகமும் நடந்தது. இதை தொடர்ந்து பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த கலசங்கள் மூலம் தங்கள் கரங்களால் காலபைரவருக்கு அபிஷேகம் செய்தனர்.

    தொடர்ந்து 12 மணிக்கு ருத்ர பாராயணம், 12.30 மணிக்கு ருத்ர ஹோமமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் கோவை யில் உள்ள அனைத்து மடங்களின் மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவை ஶ்ரீமத் தர்மராஜா அருள் பீடம், நிர்வாக குழு சிவ ஶ்ரீ கிருஷ்ண மூர்த்தி சுவாமிகள் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×